பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 யவர்களை வணங்கி விடை பெற்றுத் திருச்சிக்கு வந்தார். கோவிந்தாச்சாரியிடம் விஷயத்தைச் சொன்னார். அவ்வளவு தான்; அடுத்த நாளே திருச்சி பெரிய கம்மாளர் தெருவில் உள்ள காளியம்மன் கோயிலில் 'அபிநந்தி கேசுவரர் திரு தட்சிணாமூர்த்தி பிள்ளையவர்களின் தலைமையில் விசுவ குல திலகம் எம். கே. தியாகராஜனின் முதல் கச்சேரி அரங்கேற்று விழா நடைபெறும். வருக வருக, அனைவரும் திரண்டு வருக! என்ற சுவரொட்டிகள் மூலைக்கு மூலை காட்சியளிக்க ஆரம்பித்துவிட்டன. ‘விசுவ குல திலகமாவது அது ஜாதி வெறியைக் காட்டவில்லையா? என்று இந்நாளில் சிலர் முகத்தைச் சுளிக்கலாம். உண்மை: இந்தக் காலத்தில் அது கொஞ்சம் மறைமுகமாகக் காட்டப்படுவது உண்மை. அந்தக் காலத்திலோ அது கொஞ்சம் பகிரங்கமாகவே காட்டிக் கொள்ளப்பட்டது - வித்தியாசம் அவ்வளவே அந்த ஜாதி வெறிகூடத் தியாகராஜ ஆசாரி"யின் பாட்டுக்குத் தட்சணாமூர்த்தி ஆச்சாரி'யை மிருதங்கம் வாசிக்க விடவில்லை யென்றால், சர்வ வல்லமையுள்ள 'அந்தஸ்து" எதையெல்லாம் கடந்து நிற்கிறது என்பதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்களேன். ! திருச்சி வாசிகள் அனைவரும் ஆவலோடு எதிர் பார்த்துக் கொண்டிருந்த அந்தநாளும் வந்தது. எந்த நாள்? தியாக ராஜனின் முதல் கச்சேரி அரங்கேறிய நாள்தான். கூட்ட மாவது கூட்டம், எண்ணில் அடங்காத கூட்டம் மைக்? பேசக்கூடாது. ஆனாலும் அபிநவ நந்திகேசு வரருக்காக எங்கிருந்தோ ஒரு டேபிள் பேனை மட்டும் கொண்டு வந்து அவருக்கு எதிர்த்தாற்போல் வைத்துச் சுழல விட்டிருந் தார்கள். 'முருகா, முருகா!"என்று அவர் தம் வழக்கம் போல் வாய்விட்டுக் கூறிக்கொண்டே சபைக்கு வந்து உட்கார்ந்தார். பதினாறு வயதே நிரம்பியிருந்த பையன் தியாகராஜனைப் பார்த்ததும், முருகனின் அவதாரம் போலவே இருக்கி எம்.கே.டி.சி