பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 அவர் மட்டும் என்ன? ஆரம்பத்தில் தியாக ராஜனுக்குப் பக்கவாத்தியம் வாசிக்க மறுத்த அத்தனை பேருமே அப்படித் தான் நினைத்தார்கள். இத்தனை கோலாகலத்துடன் கச்சேரி நடந்து கொண்டி ருந்தபோது, "ஐயோ!' என்று ஒர்.அவலக்குரல் எங்கிருந்தோ வந்தது. அதைத் தொடர்ந்து, 'என்ன, என்ன நடந்தது?" என்ற கூக்குரல்கள் நாலா பக்கங்களிலிருந்தும் எழுந்தன. கோவிந்தாச்சாரி பதட்டத்துடன் கூட்டத்தை விலக்கிக் கொண்டு போய்ப் பார்த்தார். அபிநவநந்தி கேசுவர ருக்காக எங்கிருந்தோ கொண்டுவந்து வைக்கப் பட்டிருந்த டேபிள்பேனில் கைவைத்த சிறுவன் ஒருவன் ஷாக்குக் குள்ளாகிச் சற்றுத் தூரத்தில் தூக்கியெறியப்பட்டி ருந்தான். பேச்சு மூச்சற்றுக்கிடந்த அவனைச்சுற்றிநின்ற கூட்டம் "ஐயோ ஆரம்பத்திலேயே இப்படி ஒர் அசம்பா விதம் நிகழ்ந்து விட்டதே!"என்று முணுமுணுத்துக் கொண்டி ருந்தது. விஷயத்தை அறிந்த பிள்ளையவர்கள், 'கவலைப் படாதீர்கள்; முருகன் இருக்கிறான்!' என்று சொல்லிக் கொண்டே எழுந்து அவர்களை நோக்கிவிரைந்தார். அற்பப் பணப்பேய் பிடித்தே... பிள்ளையவர்கள் வந்ததும் சிறுவனைச் சுற்றி நின்ற கூட்டம் சற்றே விலகிக் கொண்டது.'முருகா இந்த நேரத்தில் இங்கே இப்படி ஒர் அசம்பாவிதம் நடக்கக் கூடாதென்று உனக்குத் தெரியாதா? இவனைக் கொஞ்சம் எழுப்பி விட்டுவிடடா!' என்றார். அவ்வளவு தான்; பையன் தூங்கி விழித்தவன்போல் விழித்து, 'ஏன், என்ன நடந்தது? என்னைச்சுற்றி ஏன் இந்தக்கூட்டம்?' என்றான் ஒன்றும் புரியாமல். ‘'வேறு என்னடா, நடக்கவேண்டும் 'குரங்கி லிருந்து வந்தவன்தான் மனிதன்' என்பதைக் கண்மூடிக் கண்