பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 பெற்ற நடிகை எம்.எஸ்.விஜயாவின் பெரியப்பாவான இவர் பாகவதருக்கு நடிப்பதற்கு வேண்டிய பயிற்சியை மனமுவந்து அளித்தார். முதல் நாடகத்தை அரங்கேற்றுவதற்குப் பணம் வேண்டாமா? அதற்கு வேண்டிய ஏற்பாட்டைச் செய்தவர் திரு.மாணிக்கம் ஆச்சாரி என்பவராவர். இவர் தியாகராஜ பாகவதரின் அத்தை மகன், இவருடைய முயற்சியால் பாகவதரின் முதல் 'ஸ்பெஷல்' நாடகம் பொன் மலையில் உள்ள ஆபீஸர்ஸ்லைனிலே அரங்கேறிற்று. அதற்குப் பின் பல காண்ட்ராக்டர்கள் தியாகராஜ பாகவதரைத் தேடி வந்தார்கள். அவர்களுடன் அவர் எந்த விதமான பேரமும் பேச விரும்பவில்லை; அதற்குரிய தகுதி தமக்கு இருப்பதாகவும் அவர் நினைக்கவில்லை. ஆகவே, அந்தப் பொறுப்பை நடராஜ வாத்தியாரிடம் ஒப்படைத்து விட்டு அவர் அதிலிருந்து விலகிக்கொண்டார். 'நடிகன் நடிகனாகத்தான் இருக்கவேண்டும்; வியாபாரியாகக் கூடாது' என்பது அவருடைய எண்ணமோ என்னவோ, யார் கண்டார்கள்? இதனால் அவருடைய அப்பா கிருஷ்ணமூர்த்திக்கும் அவருக்கும் இடையே ஒரளவு மனத்தாங்கல் கூட ஏற்பட்டது. அதன் காரணமாக, 'என் பையனின் நாடகத் துக்குப் பேரம் பேச நான் இருக்கும்போது அந்த நடராஜ வாத்தியார் யார்? ' என்று அவர் பொறுமினார். ஆனால் அந்தப் பொருமலை அவர் பாகவதரிடம் காட்டிக்கொள்ள வில்லை; அவருடைய தாயார் மாணிக்கத் தம்மாளிடம் காட்டிக் கொண்டார். அவளோ, 'பையன் எதையும் தெரியாமல் செய்யமாட்டான்; எல்லாம் தெரிந்து தான் செய்வான். நீங்கள் பேசாமல் இருங்கள்!" என்று ஒரு போடு போட்டு விட்டாள். பாகவதர் சிரித்தார்!