பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 ‘'சிரிப்பு என்னடா வேண்டியிருக்கிறது, சிரிப்பு என்று அவர் மேல் எரிந்து விழுந்தார் கிருஷ்ணமூர்த்தி. 'பணம் வந்தால் பகையும் சேர்ந்துவரத்தான் செய்யும், அப்பா! அதற்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது' என்றார் பாகவதர். இப்படியாக நாடகத் துறையிலே பிரவேசித்த தியாகராஜ பாகவதர், புதுக்கோட்டையிலே ஒரு சோதனைக்கு உள்ளானார். அங்கிருந்த பிரகதாம்பாள் தியேட்டரிலே அன்று அவருடைய நாடகம் நடப்பதாக இருந்தது. எதிர்பார்த்தபடி வசூல் ஆகவில்லை என்பதற்காகக் காண்ட்ராக்டர் பயந்து, யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஓடிவிட்டார் நாடகத்தை மேலே எப்படி நடத்துவது? நம் குழுவைச்சேர்ந்தவர்களின் கணக்கை எப்படித் தீர்ப்பது ? நாடகம் முடிந்ததும் ஊருக்கு எப்படித் திரும்பிப்போவது? வாங்கிய முன் பணம் கூட எப்பொழுதோ செலவாகி விட்டதே!... கையைப் பிசைந்தார் பாகவதர்; அதைத் தவிர அப்போது வேறொன்றும் செய்யத் தோன்றவில்லை அவருக்கு! அதற்குள் "வொய்ங், வொய்ங் என்ற விசில் சத்தமும், "எங்கே அந்தக் காண்ட்ராக்டர் இழுத்து வா, அவனை இன்னும் எத்தனை மணிக்கு நாடகம் நடத்தப் போகிறானாம்? என்ற இரைச்சலும் ரசிக மகா ஜனங்களிடையேயிருந்து எழுந்தன. 'இன்னும் கொஞ்ச நேரத்தில் கல் மாரி பொழிய ஆரம்பித்துவிடுமோ? என்ற அச்சத்தில் பாகவதர் தலையைக் கையால் அழுத்திப் பிடித்துக் கொண்டு தவித்தார். அப்போது அவருக்குக் கைகொடுத்தவர் யார் என்கிறீர்கள்?