பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 வேறு யாருமில்லை; சகநடிகர்தான். அந்த நாளில் பாகவதருடன் எந்தக் கதாநாயகிகளும் நடித்துக் கொண்டிருக்கவில்லை; அதற்கு நம் சமூகமும் அனுமதிக்கவில்லை; கதாநாயகர்கள்'தான் கதாநாயகி களாக நடித்துக் கொண்டிருந்தார்கள். அந்த வழக்கத்தை யொட்டி அன்று அவருடன் கதாநாயகியாக நடிக்கவிருந்த வர் அவருடன் குருகுல வாசம் செய்தவரும், அவருடைய அருமைநண்பருமான திரு டி.பி.ராமகிருஷ்ணன் என்பவ ராவர். தற்போது திருச்சி வானொலியில் நிலைய வித்வானாகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் அவர், 'எந்த நிலையிலும் மனிதன் தைரியத்தை இழந்துவிடக் கூடாது; நாம் நாடகத்தை நடத்துவோம்; நடப்பது நடக்கட்டும்!" என்றார். அதற்கு மேல் பாகவதர் தயங்கவில்லை; தாமதிக்க வில்லை; வேடம் தரிக்க ஆரம்பித்துவிட்டார். அன்றைய நாடகம் வள்ளித்திருமணம். பாகவதர் வேலன் வேடன் விருத்தனாகவும், டி.பி.ராமகிருஷ்ணன் வள்ளியாகவும் நடித்தனர். நேரம் ஆக, ஆகக் காண்ட்ராக்டர் எதிர்பார்த்தபடி மட்டும் அல்ல; எதிர்பாராத விதமாகவும் கூட்டம் சேர்ந்து விட்டது. அப்புறம் வசூலுக்கு கேட்பானேன்? எல்லாச் செலவும் போக எஞ்சியிருந்ததைக் காண்ட்ராக்டர் வந்தால் கொடுத்து விடுமாறு தியேட்டர்காரரிடம் தெரிவித்து விட்டுத் தம் சகாக்களுடன் நிம்மதியாக ஊருக்குத் திரும்பினார் பாகவதர். ஒரு பிழையும் செய்தறியேன்... வருமானத்தை வைத்துப் பார்க்கும்போது, சங்கீதத் துறையைவிட நாடகத்துறையே மேல் என்று நினைத் தாலும், பாகவதர் அதற்காக இதைவிடவில்லை; இதற்காக