பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 அதை விடவில்லை. இரண்டு துறைகளிலுமே ஈடுபாடு கொண்டு, அவற்றில் மேலும் மேலும் தம் கவனத்தைச் செலுத்தி வந்தார். நவாப் நாதஸ்வரம் கேட்ட கதை தெரியுமல்லவா உங்களுக்கு? ஒரு சமயம் நாதஸ்வர வித்வான் ஒருவருக்கு நவாப்தர்பாரில் கச்சேரி செய்யும் சந்தர்ப்பம் வாய்த்தது. நவாப்பைக் குவிப்படுத்த முயன்றார் வித்வான். கச்சேரி முடிந்தது; சன்மானம் கொடுக்கும் கட்டம் வந்தது. நாதஸ்வர வித்வானுக்கு ஒரு பங்கு சன்மானம் அளித்த நவாப், ஒத்து ஊதியவருக்கு மட்டும் இரண்டு பங்கு சன்மானம் அளித்தார். ஒன்றும் புரியாமல் தம்மை வெறித்துப்பார்த்த நாதஸ்வர வித்வானுக்கும் தவில் வித்வானுக்கும் அவர் சொன்ன சமாதானம்: 'உங்களைவிட அவனுக்குத்தான் கஷ்டம் அதிகம்; எவ்வளவு நேரம் தம்பிடித்து ஊதினான் அவன்' இந்த நவாப்பின் நிலையில்தான் அந்தகக் காலத்து ரசிகர்களில் பலர் இருந்தார்கள். அவர்கள் சங்கீதம் பாடுவதை விட சுவரம் பாடுவதையே அதிகம் விரும்பி னார்கள். அந்த சுவரத்தை ஒரு நடிகரோ, பாடகரோ எவ்வளவுக் கெவ்வளவு நேரம் தம் 'பிடித்துப் பாடுகிறாரோ அவ்வளவுக்கவ்வளவு நேரம் அவர்கள் கரகோஷம் செய்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்து வந்தார்கள். இத்தகைய ரசிகர்களைத் தாமும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தவேண்டும் என்பதற்காகப் பாகவதரும் சுவரம் பாடக் கற்க முயன்றார். அதற்காக அந்நாளில் சுவரம்பாடுவதில் தேர்ச்சி பெற்றிருந்த திரு. சூசையாப்பிள்ளை என்பவரை அவர் அணுகினார். அவர் பாடக் கற்றுக் கொடுத்ததோடு நிற்கவில்லை; கச்சேரிகள் பலவற்றுக்கும் ஏற்பாடு செய்தார். பிள்ளை ஏற்பாடு செய்யும் கச்சேரிகள் பெரும்பாலும் கிறிஸ்தவர் வீட்டுக் கச்சேரிகளாக இருக்கும்.அங்கே போய் அரியைப் பற்றியும் சிவனைப் பற்றியும் மட்டுமே பாடிக்