பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 கொண்டிருக்க முடியுமா? ஏசுநாதரைப் பற்றியும் பல பாடல் களைப் பாடுவார். அவற்றில் மிகப் பிரசித்தமான பாடல் இது: 'நாலு கிணற்றுத் தண்ணி நடுக்கிணற்று உப்புத்தண்ணி நல்ல தண்ணியாகச் செய்தவர் - என் ஏசுவே நல்ல தண்ணியாகச் செய்தவர்' பாகவதர் இந்தப்பாட்டை முணுமுணுத்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தால் போதும்; என்னடா, நாளை மத்தியானம் முருங்கைக்காய் சாம்பார் வைக்க வேண்டுமா?" என்று சிரித்துக்கொண்டே கேட்பாள் தாயார். "ஆமாம், அம்மா' என்று பாகவதரும் சிரித்துக்கொண்டே பதில் சொல்லிவிட்டுத் தம் அறைக்குப் போவார். இப்படி ஒரு முறையல்ல, பலமுறை அம்மா கேட்பதையும், அண்ணா பதில் சொல்வதையும் கவனித்துக் கொண்டிருந்த தம்பிமார்களுக்கு ஒன்றும் புரியவில்லை. 'நாலு கிணற்றுத் தண்ணிக்கும், முருங்கைக்காய் சாம்பா ருக்கும் என்ன சம்பந்தம்? அந்தப் பாட்டை அண்ணா பாடிக் கொண்டு வரும் போதெல்லாம் அம்மா ஏன் அப்படிக் கேட்கிறாள் அண்ணா ஏன் அப்படிப் பதில் சொல்கிறான்?" என்று அவர்கள் யோசித்தனர், யோசித்தனர், அப்படி யோசித்தனர். யோசிக்க யோசிக்கக் குழப்பம் மிஞ்சியதே தவிர, விஷயம் இன்ன தென்று விளங்கவில்லை. அண்ணாவைக் கேட்கலாமென்றாலோ அந்த அளவுக்குத் தைரியம் அக்காலத்துத் தம்பிமார்களுக்கு ஏது? அதிலும் தங்கள் அண்ணாவிடம் அவர்கள் கொண்டிருந்த அன்பும் மரியாதையும் இருக்கின்றனவே, அவை அளவிடற் கரியன. அவற்றைப் பற்றி இதோ அவர்களே சொல்வதைக் கேளுங்கள். 'எங்கள் அண்ணாரை நாங்கள் நேருக்கு நேராக நின்று கூடப்பார்க்க மாட்டோம். ஏதாவது ஒரு தூணின்