பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 "அவர் உங்கள் அண்ணாவின் குருமார்களில் ஒருவர். அவர் ஏற்பாடு செய்யும் கச்சேரி எதுவாயிருந்தாலும் அதற்கு அண்ணாதட்டாமல் போய்வருவான். தாம் ஏற்பாடு செய்யும் கச்சேரிக்கு அவர் ரூபாய் பதினைந்து என்று 'ரேட்" பேசுவாராம். அதில் பத்து ரூபாயைத் தாம் எடுத்துக் கொண்டு மீதி ஐந்து ரூபாயை உங்கள் அண்ணாவிடம் கொடுப்பாராம். அந்த ஐந்தை வாங்கிக்கொண்டு அவன் திரும்பும்போது, கொஞ்சம் நில்லுடா!' என்று சொல்லிக் கொண்டே அவர் அவனுக்குப் பின்னால் வருவாராம். அவன் நின்று, 'என்ன வேண்டும்? என்று கேட்டால், 'இரண்டு சுருட்டு வேண்டும் என்பாராம். 'சரி என்று தன் கையிலுள்ள ஐந்து ரூபாய் நோட்டை மாற்றி இரண்டு சுருட்டுகளை வாங்கிக்கொடுத்தால் 'மீதிச்சில்லறை எங்கே!” என்று கேட்பாராம். அதையும் அவரிடம் கொடுத்தால், ரூபாய் மூன்றை உங்கள் அண்ணாவிடம் கொடுத்துவிட்டுப் பாக்கியை அவர் எடுத்துக் கொள்வாராம் 'போகட்டும் மூன்று ரூபாயாவது மிஞ்சியதே' என்று உங்கள் அண்ணா திரும்பினால், 'கொஞ்சம் நில்லுடா என்று சொல்லிக் கொண்டே அவர் மீண்டும் அவனுக்குப் பின்னால் வருவாராம். 'என்ன வேண்டும்?' என்று கேட்டுக் கொண்டே நின்றால், 'ஒன்றும் வேண்டாம். உன் அம்மாவிடம் சொல்லி நாளை மத்தியானம் முருங்கைக்காய் சாம்பார் வைக்கச் சொல்; நான் சாப்பிட வருகிறேன் என்பாராம். இது தான் அவர் சொல்லிக்கொடுத்த நாலு கிணற்றுத்தண்ணி, நடுக்கிணற்று உப்புத் தண்ணி என்ற பாட்டுக்கும் 'முருங் கைக்காய் சாம்பா'ருக்கும் உள்ள சம்பந்தம்' "இந்தச் சம்பந்தத்தைப் பற்றி அண்ணார் ஒன்றுமே சொல்வதில்லையா, அம்மா?" 'அவன் என்ன சொல்கிறான்? அந்தப் பதினைந்து ரூபாய்க்காக அவர் அத்தனை பாடுபடவேண்டியதில்லை. என்னைக் கேட்டால் அதை நானே அவரிடம் அப்படியே கொடுத்துவிட்டு வந்துவிடுவேன்' என்கிறான்'