63
தெரியுமா உங்களுக்கு? என்பார். 'தெரியாதே' என்பாள் கமலா, 'ஆண்கள் பெண்களின் அழகைக் குணமாகக் கொள்கிறார்கள்; பெண்களோஆண்களின் குணத்தை அழகாகக் கொள்கிறார்கள் என்பார். அவ்வளவுதான்; அதைக் கேட்ட மாத்திரத்தில் கமலாவின் உச்சி குளிர்ந்துவிடும்.
அதுமட்டுமா? புதிதாகக் கிடைத்த கதாநாயகியுடன் தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் நாடகம் நடத்துவதற்காக அவர் திக்விஜயம் செய்யும்போது, வழியில் எத்தனையோ விதமான பேச்சுக்கள், சிரிப்புகள்...
அதிலும், புதிருக்கு மேல் புதிராகப் போட்டுப் பிறரைத் திணற அடித்து வேடிக்கை பார்ப்பதில் பாகவதருக்கு இருந்த ஆர்வம் இருக்கிறதே, அதைச் சொல்லி முடியாது.
நாலு பேர் ஒன்று சேர்ந்துவிட்டால் போதும்; "நான் ஒரு புதிர் போடட்டுமா?' என்று ஆரம்பித்துவிடுவார் அவர்.
'போடுங்கள்' என்பர் அவருடன் செல்லும் நாடகக் குழுவினர்.
‘வாழ்க்கையின் முடிவு என்ன?”
'மரணம்'
'இல்லை. '
'மோட்சம்'
'அதுவும் இல்லை.”
நரகம்!”
'ஊஹாம்; நான் சொல்லட்டுமா?"
'சொல்லுங்கள்'
'கை வாழ்க்கை கையன்னாவில் தானே முடிகிறது" என்பார் அவர்.
அடக் கடவுளே! இது தெரியாமல் போச்சே எங்களுக்கு' என்று நாடகக்குழுவினர் வியப்பார்கள்.