பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 அடுத்தாற்போல், 'நானும் என் ஆகாரமும் கறுப்பு: அது என்ன?' என்பார் பாகவதர். 'நீங்களும் உங்கள் ஆகாரமும் கறுப்பா! இல்லையே? நீங்கள் சிவப்பு, உங்கள் ஆகாரம் வெளுப்பு இல்லையா என்பர் நாடகக் குழுவினர். சரி உங்களுக்கு தெரியவில்லை என்றால் நான் சொல்கிறேன். அதுதான் புகைவண்டி என்பார் நான் அதைக் கேட்கவில்லை; இரண்டையும் கறுப்பாகக் கொண்டது எது என்று கேட்கிறேன்' 'இரண்டும் கறுப்பாகவா? அது, அது...' 'நான் சொல்லட்டுமா?" 'சொல்லுங்கள்' 'புகை வண்டி' என்பார் அவர். 'பார்த்தீர்களா? இப்போது நாங்களும் உங்களுடன் அதில் தான் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறோம், அப்படியும் அது தெரியாமல் போய்விட்டது எங்களுக்கு' என்று தங்களைத் தாங்களே நொந்து கொள்வார் நாடகக் குழுவினர். 'சரி, இந்தப் புதிருக்காவது உங்களால் விடைகாண முடிகிறதா என்று பாருங்கள்' எனச் சொல்லிவிட்டு, 'ஒன்றுக்கு இரண்டு கால்கள் உண்டு; ஆனால் பாதங்கள் இல்லை. அது என்ன?' என்பார் பாகவதர். 'பாதங்கள் இல்லாத கால்கள் அது என்ன கால்கள்?' என்று யோசிப்பர் யோசிப்பர், அப்படி யோசிப்பர் நாடகக் குழுவினர். 'நான் சொல்லட்டுமா?' என்பார். "சொல்லுங்கள் என்பர் நாடகக் குழுவினர். 'அதுதான் பேண்ட் ஐயா, பேண்ட் என்று சொல்லிச் சிரிப்பார் பாகவதர்.