பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 இப்படி ஏதாவது புதிர்போட்டுத்தான் அவர் தம் பொழுதைக் கழிப்பாரே தவிர, அதற்காகச் சீட்டாட மாட்டார். சிகரெட் குடிக்க மாட்டார்; பிறரைப்பற்றி வம்பும் பேசமாட்டார்; அவையெல்லாம் தீயவை, ஒதுக்க வேண்டியவை என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார். உணர்ந்திருந்ததோடு மட்டுமல்ல; அவற்றைத் தம் வாழ்நாள் முழுவதும் மறக்காமலும் இருந்தார். புதிர் போடுவதில் மட்டும் பாகவதர் வல்லவரா யில்லை; சிலேடையாகப் பேசுவதிலும் வல்லவரா யிருந்தார். ஒரு சமயம் பிரமுகர் ஒருவர் தம் வீட்டில் அவருக்கு விருந்து வைத்தார். சாம்பார், ரசத்துக்குப் பிறகு கெட்டித்தயிர் பரிமாறப் பட்டது. அதைச் சோற்றில்விட்டுப் பிசைந்த பாகவதர், "நாங்களும் சென்னையில் தயிர்விட்டுக்கொண்டு சாப்பிடுகிறோம். என்ன பிரயோசனம்? அது மானங்கெட்ட தயிராகவல்லவா இருக்கிறது!’ என்றார். அவருடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த வர்களுக்கு ஒன்றும் புரியவில்லை; மானங்கெட்ட தயிரா! அது என்ன தயிர்?' என்பதுபோல் அவர்கள் அவருடைய முகத்தைப் பார்த்தனர். 'இந்தத்தயிரில் உள்ள ஆடை கையைப் பிசுபிசுக்க வைக்கிறதே! அந்தத் தயிரில் ஆடை ஏது, வாடைதான் ஏது?' என்றார் பாகவதர். அப்பொழுதுதான் புரிந்தது ஆடை, என்றால் உண்ணும் பால் ஆடையையும் குறிக்கும். உடுத்தும் நூல் ஆடை'யையும் குறிக்கும் என்பது அவர்களுக்கு! இப்படியாகப் பலரைக் கவர்ந்த பாகவதர் கடைசியாகச் செட்டி நாட்டுக்குச் சென்றபோது, அங்கிருந்த மான கிரிலேனாவையும் கவர்ந்தார். 'யார் இந்த மானகிரி லேனா என்கிறீர்களா? எம்.கே.டி.5