பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 அவர்தான் பின்னாளில் கிருஷ்ணா பிக்சர்ஸ்' என்ற ஒரு நிறுவனத்தைச் சென்னை தியாகராய நகரில் நிறுவி, ஒரே நட்சத்திரப் படங்களாக எடுத்துத் தள்ளிய திரு இலட்சுமணன் செட்டியார் என்பவராவர். கைராசிக்காரர் அவர்; பலரை கை தூக்கிவிட்ட பெருமை அவரைச் சேர்ந்தது. ஆம், நாள் ஒன்றுக்கு முதன் முதலாக பாகவதருக்கு மட்டும் ரூபாய் ஐம்பது சம்பளம் என்று பேசி, ஐம்பது நாடகங்களுக்கு அவர் பாகவதரை ஒப்பந்தம் செய்தார். ஐம்பதாவது நாடகத்தின் முடிவில்... ‘போர்ட்டுரர் கார் ஒன்று வாங்கி, அதை அவர் பாகவதருக்குப் பரிசாக அளித்து மகிழ்ந்தார். இப்படி ஒரு 'காண்ட்ராக்டரை இந்த நாளில்கூட உலகத்தில் பார்க்க முடியாதல்லவா? அதற்குப் பின் பாகவதரின் சம்பளம் நாள் ஒன்றுக்கு ரூபாய் ஐம்பது என்று மட்டும் இருக்கவில்லை; நூறு, நூற்றைம்பது, இருநூறு, இருநூற்றைம்பது, முன்னூறு என்று உயர்ந்துகொண்டே போயிற்று. எல்லாம் மானகிரிலேனாவின் அருள்தான் என்றாலும், பாகவதர் அதைப் பகவான் அருள் என்றே நினைத்தார். ஞான குமாரி, நடனசிங்காரி... மகான் தியாகய்யரிடம் மற்ற வித்வான்களுக்கு எவ்வளவு பக்தி இருந்ததோ, அவ்வளவு பக்தி தியாகராஜ பாகவதருக்கும் இருந்தது. ஆயினும் ஏனோ தெரிய வில்லை, அவருடைய பேரால் ஆண்டுதோறும் திருவை யாறில் நடக்கும் உற்சவத்தில் பாகவதரை மற்ற வர்கள் பாட விடுவதில்லை.