பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 உணவு கிடைத்ததும் வயிற்றுக்கு உணவு கிடைக்காத குறையைக் கூடக் கூடியிருந்தோர் மறந்துவிட்டனர். பொது மக்கள் என்னதான் விரும்பினாலும் உற்சவ நிர்வாகிகளுக்கு விரோதமாக பாகவதர் மேலே பாட விரும்பவில்லை; கச்சேரியை முடித்துக்கொண்டு புறப் பட்டார். 'நாளைக்கும் இங்கே வந்து நீங்கள் பாட வேண்டும்; ' என்று கேட்டுக்கொண்டே கூட்டம் அவரைத் தொடர்ந்தது. பாகவதருக்கு ஒன்றும் புரியவில்லை; நின்றார். நாளைக்கு இங்கே வந்து பாட முடியுமென்று எனக்குத் தோன்ற வில்லையே t' என்று கையைப் பிசைந்தார். அப்போது அந்த வழியாக வந்த திரு.ராஜமாணிக்கம் என்பவர், “இங்கே பாட முடியாவிட்டால் என்ன? பாடு வதற்கு வேறு இடமாயில்லை? நீங்கள் வாருங்கள்; நான் அதற்கு வேண்டிய ஏற்பாடு செய்கிறேன்!” என்று பாகவதரைத் தம் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனார். ராஜமாணிக் கத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்த பொதுமக்கள், ‘எப்படியும் பாகவதரின் கச்சேரியை இன்னொருமுறை கேட்கும் வாய்ப்பு நமக்குக் கிட்டும் என்ற திருப்தியுடன் கலைந்து சென்றனர். அவர்கள் எதிர்பார்த்தது வீண் போகவில்லை; மறுநாள் மாலையே தஞ்சாவூர் நாணயக்காரச் செட்டித் தெருவிலுள்ள இராமலிங்க சுவாமிகள் மடத்தில் பாகவதரின் கச்சேரி நடந்தது. கூட்டம் திருவையாறுக்கா போகும்; தஞ்சாவூருக்குத் திரும்பிவிட்டது! பார்த்தார் பாகவதர்; மற்ற வித்வான்கள் தம்முடைய மனத்தைப் புண்படுத்தினாலும் பாகவதர் அவர்களுடைய மனத்தைப் புண்படுத்த விரும்பவில்லை; முதல்நாள் கச்சேரியுடன் திருச்சிக்குத் திரும்பிவிட்டார் - மகான் தியாகய்யரிடமும் மக்களிடமும் மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டுதான்.