பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 'டி. கே. எஸ்ஸுக்கு விரோதமாகவா மன்னிக்க வேண்டும்; அது என்னால் முடியாத காரியம். ' 'இல்லை; அவருடைய சம்மதத்துடன்தான். தம்மால் எனக்கு நஷ்டம் ஏற்படுவதை அவர்கூட விரும்பவில்லை. ' 'அப்படியானால் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றி வைக்க நான் தயாராயிருக்கிறேன். ' 'மகிழ்ச்சி' என்று அன்றே பாகவதரை அழைத்துக் கொண்டு பொன்னமராவதிக்கு வந்தார் கோவிந்தசாமி. மறுநாள் வள்ளி திருமணம் நாடகம் போடு வதென்று முடிவாயிற்று. 'கோல்டன் சாரதாம்பாள் வள்ளி; பாகவதர் வேலன், வேடன், விருத்தன்' என்று போஸ்டர்கள் அச்சிடப்பட்டு மூலைக்கு மூலை ஒட்டப்பட்டன. பாகவதரை முதன்முதலாகப் பார்த்த திரு டி. கே. சண்முகம் அவருடைய அழகிலும், அற்புதமான சாரீரத்திலும் அப்படியே சொக்கி நின்றார். பாகவதர் தமக்கே உரிய தன்னடக்கத்துடன், நான் ஒன்றும் தெரியாதவன்; புதிதாக நாடக மேடைக்கு வந்திருக் கிறேன். நீங்கள் பாய்ஸ் கம்பெனி நடிகர்கள்; நன்றாக நடிக்கவும் பேசவும் தெரிந்தவர்கள். நான் ஏதாவது தவறு செய்தாலும் நீங்கள்தான் அதைச் சரிப்படுத்திக் கொண்டு போகவேண்டும்' என்றார் அவரிடம். பாகவதரிடம் இத்தகைய தன்னடக்கத்தை சண்முகம் எதிர்பார்க்கவில்லை; பதிலுக்கு என்ன சொல்வது, என்ன செய்வது என்று ஒன்றும் புரியாமல் வியப்பே உருவாய் நின்றார்... நாளை இரவு நீங்கள் எங்களுடன் நாரதராக நடிக்கவேண்டும்' என்றார் பாகவதர். "மகிழ்ச்சி என்றார் சண்முகம்.