பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 மறுநாள் கூட்டத்துக்குக் கேட்க வேண்டுமா? -ஒரே கூட்டம், வசூலுக்கும் குறைவில்லை. பாகவதர் மேடையில் தோன்றியது தான் தாமதம், 'ஞானகுமாரி, ஞானகுமாரி' என்று மக்கள் குரல் கொடுத்தனர். சக்தியிடமிருந்து முருகன்வேல் பெறுவதற்காகப் பாடும்.அந்தப் பாட்டை அன்று பாகவதர் தேவகாந்தாரியில் தேவகானம் போல் பாடினார். ஒரே கரகோஷம் அந்தக் கரகோஷத்தில் மற்றவர்கள் இருந்த இடமே தெரிய வில்லை! கல்லோ, இரும்போ?... நாடக உலகத்தில் மட்டுமல்ல; சினிமா உலகத் திலும் பாகவதருடன் கதாநாயகிகளாக நடித்த நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர் திருமதி எஸ். டி. சுப்புலட்சுமி, இவர் தமக்குப் பதினைந்து வயது நிறையும் முன்னரே எம்.கே.டி. யுடன் நடிக்க ஆரம்பித்துவிட்டார். பாகவதருடன் இவர் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்த நாடகம் வள்ளிதிருமணம். இது கேரளத்திலுள்ள கொல்லம் தியேட்டரில் நடந்தது. எம்.கே.டி அப்போது பதினெட்டு வயது நிறைந்த காளை, எஸ்.டி.எஸ்.ஸோ பதினைந்து வயது கூட நிறையாத கன்னி. இந்த வயதில் இருவருக்கும் இயற்கையான குறும்புத்தனம் இருக்கத்தானே இருக்கும்? அதற்கு ஏற்றாற் போல் அந்தக் காலத்து நாடக வாத்தியார்களும் நடிகர் நடிகையர்களுக்கு இயற்கையாயுள்ள குறும்புத்தனத்தைத் தங்கள் பாட்டாலும் வசனத்தாலும் வளர்த்து, அதைத் தாங்கள் வேடிக்கை பார்த்து மகிழ்ந்ததோடு, ரசிகர்களையும் வேடிக்கை பார்த்து மகிழ வைத்துக் கொண்டிருந்தார்கள்.