பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 விடுகிறது; முகம் செக்கச் செவேரென்று சிவந்து விடுகிறது; அதைப் பார்க்கப் பார்க்கப் பாகவதருக்கு மட்டு மல்ல; ரசிகர்களுக்கும் ஒரே கும்மாளம்; குஷி நாடக வாத்தி யாரான நடராஜப் பிள்ளை இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விடுவாரா? 'ம், பாடு அந்த அடியையே திருப்பிப்பாடு!" என்று தம் சீடனுக்குத் திரை மறைவிலிருந்து கட்டளையிடுகிறார். எம்.கே.டி.பொங்கி வரும் சிரிப்பை அடக்கிக் கொண்டு பாடுகிறார் 'உன்மனம் இரும்போ, கல்லோ, பாறையோ, குட்டிச் சுவரோ? ' 'சபாஷ்' 'வொண்டர்புல்' ரசிகர்களின் குதுரகலத்தையும் பாகவதரின் குமிழ்ச் சிரிப்பையும் பார்க்கப் பார்க்கப் பற்றிக்கொண்டு வருகிறது எஸ். டி.எஸ்.ஸ்-க்கு. முகத்தை ஒரு வெட்டு வெட்டித் திருப்புகிறார். தம்முடைய வெறுப்பைக் காட்ட ரசிகர்களோ அந்த வெட்டில்கூட எஸ்.டி.எஸ்.ஸின் கொள்ளை அழகைக் காண்கின்றனர். அதற்கு மேல் கேட்க வேண்டுமா? "வொய்ங், வொய்ங் என்ற சீழ்க்கை ஒலி காதைப் பிய்த்துக் கொண்டு போகிறது. 'ஸைலன்ஸ், ஸைலன்ஸ்!' தியேட்டர்காரர் என்னதான் கையமர்த்தியும் ரசிகர்கள் கேட்கவில்லை; விசில் 'அடிப்பதை விட்டு விட்டு, 'ஒன்ஸ்மோர், ஒன்ஸ்மோர்!’ என்று மீண்டும் இரைகிறார்கள். பாகவதர் மீண்டும் பாடுகிறார். 'உன் மனம் இரும்போ, கல்லோ, பாறையோ, குட்டிச் சுவரோ? ' எஸ். டி. எஸ்.ஸ்-க்கு ஆத்திரம், தாங்கவில்லை. 'இன்னொரு முறை இப்படிப் பாடினால் எனக்குக் கெட்ட கோபம் வரும், ஆமாம் என்று எச்சரிப்பதுபோல் பாகவதரைப் பார்க்கிறார். அவரும் போனாற் போகிற தென்று அத்துடன்