பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 கலைஞனுக்கு அம்மை போட்டால் கவலைக்கு கேட்க வேண்டுமா? மற்றவை எப்படியாவது இருக்கட்டும்; 'முகவெட்டு அவனுடைய முதல் மூலதனம்' அல்லவா? அது இந்த அம்மையால் கெட்டு விடக்கூடாதே என்ற கவலை பாகவதருக்கு. தாயார் மாணிக்கத்தம்மாளுக்கோ, எது எப்படி யாவது போகட்டும்; பையன் பிழைத்து எழுந்தால் போதும்’ என்ற கவலை. அதற்காக அவள், 'என் பிள்ளையை எப்படியாவது பிழைக்க வைத்து விடடி, அம்மா உனக்கு நான் அவன் முடியைக் கொடுக்கிறேன்' என்று தஞ்சை மாரியம்மனுக்குப் பிரார்த்தனை செய்து கொண்டாள். அந்தப் பிரார்த்தனையின் பயனாகத்தானோ என்னவோ, பாகவதர் வெகு சீக்கிரத்திலேயே பிழைத் தெழுந்தார். அவர் பயந்தபடி, அவருடைய முகமும் அவ்வளவாகப் பாதிக்கப்படவில்லை. - மாணிக்கத்தம்மாளின் மகிழ்ச்சிக்குக் கேட்க வேண்டுமா? பையனை உடனே தஞ்சை மாரியம்மன் கோவிலுக்கு அழைத்துக்கொண்டு போய்மொட்டை அடித்துவிட்டாள்! போயிற்று; பாகவதரின் கட்டுக் குடுமி அன்றுடன் போயிற்று. ஆம், பாகவதர் அதுவரை குடுமிதான் வைத்துக் கொண்டிருந்தார். நாடகங்களில் நடிக்கும்போது மட்டும் விக்"வைத்து நடித்துக் கொண்டிருந்தார். அப்படியானால் பிரசித்தி பெற்ற அந்தப் 'பாகவதர் கிராப் அவருக்கு எப்படி வந்தது? அதைப்பற்றி அவருடைய அருமைத் தம்பி திரு.எம்.கே.கோவிந்தராஜ பாகவதர் கூறுவதைக் கேளுங்கள். 'என் அண்ணாவின் கிராப்பைப் பின்பற்றி பலர் பலவிதமாகத் தங்கள் முடியைக் கத்தரித்துக் கொண்டு திரிந்ததை நான் அறிவேன். உண்மையில் அவர்தம் முடியை அப்படியெல்லாம் கத்தரித்துவிட்டுக் கொண்டதே