பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 கிடையாது. மாரியம்மனுக்கு பிரார்த்தனை செலுத்திய பின் அவருடைய முடி அந்த அளவே வளர்ந்து நின்றுவிட்டது. அதற்குப் பிறகு அது வளரவும் இல்லை; அதை வெட்டி விட்டுக் கொள்வதற்காக அவர் எந்த சலூன் காரரையும் அழைக்கவும் இல்லை. சுயமாக கூடிவரம் செய்து கொள்ளும் அவர் தம்முடைய முகத்தை மட்டுமே அவ்வப்போது கூடிவரம் செய்துகொள்வார். ' இதுவே 'பாகவதர் கிராப் பின் ரகசியம், இந்த ரகசியம் தெரியாமல் அன்று மட்டும் என்ன, இன்றும் எத்தனை பேர் அவரைப்போலவே கிராப் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை கொண்டு படாத பாடு பட்டுக் கொண்டிருக்கின்றனர். இரண்டு மூன்று மாத கால ஓய்வுக்குப் பின் மறுபடியும் நாடக மேடைக்கு வந்தார் எம்.கே.டி. சினிமா உலகத்துக்கு வந்த பிறகே அவருக்குப் பெயரும் புகழும் கிடைத்தன என்று இன்னும் சிலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அது உண்மை அல்ல; அதற்கு முன்னரே அவர் அவற்றை வேண்டிய அளவுக்கு அடைந்து விட்டார். அதன் காரணமாக ஓய்வு ஒழிச்சல் இன்றி நாடகம், கச்சேரி என்று ஏதாவது ஒன்று அவருக்கு நாள்தோறும் இருந்தது. இந்த நிலையில் அவருக்கு எப்போது ஒய்வு கிடைத்தது என்பதைப்பற்றி அவருடைய தம்பிகளில் இன்னொருவரான திரு எம்.கே. சண்முகம் சொல்வதைக் கேளுங்கள்: 'வீராதி வீரனாக விளங்கிய நெப்போலியன் தன் னுடைய குதிரையின் மேல் ஆரோகணித்துச் செல்லும்போது தான் சற்றே கண்ணயர்ந்து ஒய்வு எடுத்துக் கொள்வார். ' இந்த நிலையில் ஊர்ஊராகப் போய்க் கொண்டிருந்த பாகவதர் ஒரு சமயம் மன்னார் குடிக்குப் போனார். வேறு எதற்கு? நாடகம் நடத்தத்தான். அங்கே "வள்ளித்திருமணம்’