பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பதிலுக்கு 'வணக்கம்' என்று சொல்லிவிட்டு, 'உட்காருங்கள்' என்றார் பாகவதர். 'இருக்கட்டும்... ' என்று வந்தவர் நின்று கொண்டே தாம் கையோடு கொண்டு வந்திருந்த பைக்குள் கையைவிட்டார். அதிலிருந்த புத்தம் புது சீப்பு ஒன்றை எடுத்து பாகவதரிடம் கொடுத்து, 'இந்தச் சீப்பால் உங்கள் தலையைக் கொஞ்சம் சீவுங்கள்'என்றார். பாகவதருக்கு ஒன்றும் புரியவில்லை. வந்தவரை மேலும் கீழுமாகப் பார்த்தார். கீழ்ப்பாக்கத்தில் இருந்து தப்பி வந்தவராகவும் தெரியவில்லை. மன்னார்குடி எங்கே இருக்கிறது; கீழ்ப்பாக்கம் எங்கே இருக்கிறது? அப்படியே இருந்தாலும் அவர் சொன்னபடி செய்வது தான் இப்போதைக்கு நமக்கு நல்லது என்று தீர்மானித்து அவர் கொடுத்த சீப்பைக் கொண்டு தன் தலையைச் சீவினார் பாகவதர். வந்தவருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. 'அதை அப்படியே கொடுங்கள், அதை அப்படியே கொடுங்கள்' என்று பாகவதரின் கையில் இருந்த சீப்பை வாங்கித் தம் பைக்குள் பத்திரமாக வைத்துவிட்டு, வேறொரு சீப்பைத் தம்மடியிலிருந்து எடுத்தார். அது பல்லெல்லாம் ஒடிந்து போன சீப்பு அந்தச் சீப்பைப் பாகவதரிடம் காட்டி, 'போன வருஷம் உங்களை நான் பொள்ளாச்சியில் சந்தித்தேன். அப்போது நீங்கள் சீவிக் கொடுத்தசீப்பு இது. இதன் பல் எல்லாம் ஒடிந்து விடவே இப்போது புதிய சீப்பொன்று வாங்கிக்கொண்டு வந்து உங்களைச் சீவிக் கொடுக்கச் சொன்னேன்' என்ற அவர், அதையும் வீசி எறியாமல் தம் மடியில் மறுபடியும் வைத்துக்கொண்டு, 'நான் வருகிறேன்; வணக்கம்' என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினார்.