பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 அதுவரை அவரைக் கவனித்துக்கொண்டிருந்த எஸ். டி. எஸ். என்ன, வேறு யாரால்தான் சிரிக்காமல் இருக்கமுடியும்? இப்படியும் ஒரு ரசிகர் உண்டா? என்று அவர் சிரித்தார். பாகவதரோ சிரிக்கவில்லை; அதற்குப் பதிலாக வைத்தவிழி வாங்காமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்த அவர், 'என்னிடம் இத்தனை ாடுபாடு கொண்டுள்ள இவரைப் போன்ற ரசிகர்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்?' என்றார் தம் நெஞ்சு நெக்குருக. 'நடிகன் உணர்ச்சி மயமானவன்; பெண்கள் விஷயத்தில் அவன் சில சமயம் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமற் போவதற்கு அதுவும் ஒரு காரணம்' என்று கலை உலகத்தோடு சம்பந்தப்பட்ட சிலர் நாசூக்காகச் சொல்வதுண்டு. அது ஒரு நாள் பாகவதரின் தந்தையான கிருஷ்ணமூர்த்தியின் காதுக்கும் எட்டியது. அவ்வளவுதான்; அவர் உடனே தம்மகனுக்கு விழுந்து விழுந்து பெண் தேட ஆரம்பித்துவிட்டார். அவர் ஊரில் இல்லாத சமயம் பார்த்து, நடராஜ வாத்தியார் பாகவதரைத் தேடி வந்தார். 'ஏன், அவர் இருக்கும் சமயத்தில் வந்தால் என்ன?” என்று உங்களில் யாரும் கேட்க மாட்டீர்களென்று நினைக்கிறேன். 'வாத்தியாரைக் கண்டால் அவருக்குப் பிடிக்காது' என்றுதான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லி யிருக்கிறேனே! வந்தவரை வரவேற்று, 'என்ன விஷயம்?' என்று விசாரித்தார் பாகவதர். 'ஒன்றுமில்லை; எழுத்தாளனுக்குப் புகழ் கிடைக்கும் அளவுக்குப் பணம் கிடைப்பதில்லை என்பது தான் உங்களுக்குத் தெரியுமே? அந்தப் பணம் இப்போது எனக்குக் கொஞ்சம் தேவை யாயிருக்கிறது. அதை நீங்கள் எம்.கே.டி.6