பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 பணமாகக் கொடுத்துத்தான் உதவ வேண்டும் என்பதில்லை; எனக்காக மூன்று நாடகங்கள் நடித்துக் கொடுக்கச் சம்மதித்தால் கூடப் போதும். மற்றவற்றுக்கு நானே ஏற்பாடு செய்துவிடுகிறேன்!"என்றார் வாத்தியார். 'ரொம்ப சந்தோஷம்; உங்களுக்கு அந்த வகையில் ஏதாவது செய்யவேண்டும் என்ற நானே பல சமயம் நினைத்ததுண்டு. இப்போது நீங்களே அதற்கு வேண்டிய ஏற்பாட்டைச் செய்வதாகச் சொல்கிறீர்கள். பேஷாகச் செய்யுங்கள்; நான் வந்து நடித்துக் கொடுக்கிறேன்' என்று பாகவதர் உடனே தம் சம்மதத்தைத் தெரிவித்துவிட்டார். வாத்தியாரின் மகிழ்ச்சிக்குக் கேட்க வேண்டுமா? 'குட்டி அமெரிக்கா என்று அந்நாளிலேயே பெயர் பெற்றிருந்த கோயமுத்துரிலே பாகவதரை வைத்து மூன்று நாடகங்கள் நடத்த அவர் திட்டமிட்டு, அவற்றுக்கான 'போஸ்டர்களையும் உடனே அச்சிட்டு மூலைக்கு மூலை ஒட்ட ஏற்பாடு செய்து விட்டார். இந்த விஷயம் பாகவதரின் தந்தையான கிருஷ்ண மூர்த்திக்குத் தெரிய வந்ததுதான் தாமதம், 'நடக்காது; இந்த நாடகங்கள் என் உடம்பில் உயிருள்ள வரை நடக்காது' என்றார் அவர். நடக்கும்; இந்த நாடகங்கள் என் உடம்பில் உயிருள்ள வரை நடக்கும்' என்றார் பாகவதர். 'உனக்குத் தெரியாது; நான் இல்லாவிட்டால் பாகவதர் இல்லை என்று அவர் ஊரெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்' 'நீங்களும் தான் 'என் மகன் இல்லாவிட்டால் நடராஜ வாத்தியார் இல்லை என்று ஊரெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்' 'அதற்காக?' 'இதெல்லாம் மனிதனின் இயற்கையான பலவீனங்கள் அப்பா அதைவைத்து நாம் ஒருவரை