83
விரும்புவதோ, வெறுப்பதோ கூடாது. நம்மை வைத்து அவர் வளர்ந்திருக்கிறார் என்றால், அவரை வைத்து நாமும் வளர்ந்திருக்கிறோம் என்பதையும் நாம் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும். இந்த விஷயத்தில் தயவு செய்து நீங்கள் தலையிட வேண்டாம். இது உங்களுக்குப் பிடிக்க வில்லையென்றால் கொஞ்சம் ஒதுங்கியிருங்கள்; நான் மட்டும் கோயமுத்துருக்குச் சென்று நாடகங்களை நடத்திக் கொடுத்துவிட்டு வந்துவிடுகிறேன்!"
'முடியாது; தலையிருக்காமல் வால் ஆடுவதா? கூடாது!’’
பாகவதர் சிரித்தார்; தாமும் சிரித்துத் தம் தந்தை யாரையும் சிரிக்க வைக்கும் முயற்சியில் அவர் சொன்னார்.
'நன்றிக்கு நாய் வாலைத்தானே ஆட்டுகிறது?"
'நாம் நாய்கள் அல்லடா, மனிதர்கள்'
'அதனால் தான் நமக்கு வால் இல்லையே என்று நான் அவருக்குத்தலையை ஆட்டி வைத்தேன்'
'இப்படியெல்லாம் பேசி என்னை நீ உன்னுடைய இஷ்டத்துக்கு இணங்க வைத்துவிட முடியாது. அடுத்த வாரம் உனக்குக் கல்யாணம்; பெண்ணுக்குத் தஞ்சாவூர்; பெயர் கமலம். கலியாணத்துக்கான ஏற்பாட்டை நான் நிம்மதியாகச் செய்யவேண்டுமானால் நீ இந்தக் கோய முத்துர் பயணத்தை உடனே நிறுத்து!"
'கலியாணத்துக்குக் குறுக்கே நான் நிற்கவில்லை; நீங்களும் வாத்தியருக்காக நான் நடித்துக் கொடுக்கவிருக்கும் நாடகத்துக்குக் குறுக்கே நிற்கவேண்டாம்'
இதைச் சொன்னதும் பாகவதர் விர்ரென்று வெளியே போய்விட்டார். 'என்னை அறியாமல் அது எப்படி நடந்து விடும்? பார்க்கிறேன் ஒரு கை!' என்று கருவினார் கிருஷ்ணமூர்த்தி.