பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 டயர் ஒன்று வெடித்திருந்தது 'இருக்கவே இருக்கிறது ஸ்டெப்னி என்று அந்த வெடித்த டயருக்குப் பதிலாக அதை மாற்றிப் போட்டுக் கொண்டு, அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். அடுத்த பத்தாவது மைலில்... டமார்! அதே வெடிச்சத்தம் காரை நிறுத்தி, மறுபடியும் கீழே குனிந்து பார்த்தால் இன்னொரு டயர் காலி: 'இதென்ன வம்பு அப்பாவின் சாபமா? என்று சுற்றும்முற்றும் பார்த்தார் பாகவதர். அவருடைய காரைத் தொடர்ந்து இன்னும் சில கார்கள் அந்த வழியே வந்து கொண்டிருந்தன. அந்தக் காருக்குரியவர்களின் உதவியால் இரண்டாவதாக வெடித்த டயரையும் சரி செய்து கொண்டு பாகவதர் தம் நண்பர் களுடன் அங்கிருந்து புறப்படும்போது மணி ஐந்து காலை ஏழு மணி இருக்கும்; கரூர் ஆற்றங்கரையைப் பாகவதரின் கார் நெருங்கியபோது, எல்லோருக்கும் குளிக்க வேண்டும் போல் தோன்றிற்று. இரவு முழுவதும் டிரைவ ருக்கு உதவியாகக் காருக்குக் கீழே படுத்து மண்ணில் உருண்டு புரண்டு எழுந்தவர்களல்லவா? ஆற்றைக் கண்டதும் ஆனந்தமாக இறங்கிக் குளித்தார்கள். குளித்துவிட்டு வந்த பிறகுதான் பாகவதரைத்தவிர வேறு யாரும் மாற்றுடைகள் கொண்டு வரவில்லை என்பது தெரிந்தது. 'அதனால் என்ன, என் பெட்டியில் உள்ளவற்றை எடுத்து அணிந்து கொள்ளுங்கள்' என்றார் பாகவதர். பெட்டியைத் திறந்து பார்த்தால், அதில் இருந்தவை எல்லாம் சரிகை வேட்டிகளும், சரிகை அங்கவஸ்திரங் களும், சில்க் ஜிப்பாக்களுமாக இருந்தன. அவற்றைவிட்டால் வேறுவழி?... பாகவதரின் நண்பர்கள் அனைவரும் அவரைப் போலவே சரிகை