பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 அத்தனையும் இன்று வரும் சினிமாப் படங்களில் பாடப்படுவது போல் எளிய சந்தங்களில் அமைக்கப் பட்டவையா? இந்துஸ்தானி மெட்டுக்களில் பாடப் பட்டவையா? இல்லை; சுருதி சுத்தமான கர்நாடக இசையில் அமைக்கப்பட்டவை; பாடப் பட்டவை. பாகவதரால் அவற்றை எப்படி அவ்வளவு எளிமையாக, அவ்வளவு இனிமையாக, அவ்வளவு எழிலாகப் பாட முடிந்தது? படித்தவர்களால் மட்டுமல்ல; பாமரர்களாலும் அவற்றை எப்படி அவ்வளவு சுத்தமாகப் பின்பற்றி இசைக்க முடிந்தது? அதை வெறும் 'அதிசயம் என்று சொன்னால் போதாது; 'அதிசயத்திலும் அதிசயம் என்றே சொல்ல வேண்டும். ஆம், இந்துஸ்தானி இசையை மட்டுமல்ல; கர்நாடக இசையையும் பாடுவதுபோல் பாடினால் அதை எல்லோரும் பாட முடியும்,அனுபவிக்கமுடியும், என்னும்உண்மையைப்பொறாமை மிகுந்த இந்த உலகத்துக்கு முதன் முதலில் புன்னகையுடன் எடுத்துக்காட்டிய பெருமை பாகவதரையே சேரும். இதைச் சிலர் மறுக்கலாம்; ஆனால் மறைக்க முடியாது! அதோ, காரில் போகிறாரே; அவர்தமக்குப் பக்கத்தில் 'உம்'மென்று முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டு உட்கார்ந் திருக்கும் தம்முடைய இளம் மனைவியைக் கடைக் கண்ணால் பார்த்துச் சிரித்துக் கொண்டே, ராதே, உனக்குக் கோபம் ஆகாதடி என்று பாடுகிறார். இதோ, வெயிலில் வியர்க்க விறுவிறுக்க கட்டை வண்டியை இழுத்துக் கொண்டு செல்கிறானே, இவன் தனக்கு எதிர்த்தாற்போல் தலையில் புற்கட்டைச் சுமந்து வரும் பெண்ணைப் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டே, 'மன்மதலீலையை வென்றார்உண்டோ என்று பாடுகிறான்.