பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 அவ்வளவுதான் அடுத்த நிமிஷமே அருகிலிருந்த ஒரு பெரிய மனிதர் வீட்டுக்குப் பாகவதர்தம் நண்பர்களுடன் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே காலை ஆகாரம் எல்லோருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது. நல்ல வேளை நாதசுரமோ தவிலோ அவர்கள் வசம் அப்போது இல்லை ஆதலால், ஒரு பாட்டாவது வாசித்து விட்டுப் போங்கள் என்று ரசிகர்கள் அவர்களை வற்புறுத்தாமல் விட்டுவிட்டார்கள்! ரசிகர்களுடைய அன்புத்தொல்லையிலிருந்து 'தப்பினோம், பிழைத்தோம் என்று கோயமுத்துருக்கு வந்து பார்த்தால், அங்கே நடராஜ வாத்தியாரையும் காணோம்; நாடகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளையும் காணோம்: 'இதென்ன, வாத்தியார் நம்மை இப்படிக் கைவிட்டு விட்டாரே? இவருக்காக அப்பாவைக் கூட அவ்வளவு தூரம் வெறுத்துக்கொண்டு நான் இங்கே படாத பாடுபட்டு வந்து சேர்ந்தேனே' இப்படி வாய்விட்டுச் சொல்லி வருந்திய பாகவதர் அதற்குமேல் ஒரு கணம்கூட அங்கே தாமதிக்கவில்லை; அப்படியே திரும்பித் திருச்சிக்குவந்தார். 'அப்பா, இனி உங்களுடைய பேச்சை நான் மீறப்போவதில்லை'என்றார். தந்தையின் சந்தோஷத்துக்குக் கேட்க வேண்டுமா? அடுத்த மூன்றாவது நாளே செல்வன் தியாகராஜனுக்கும் செல்வி கமலத்துக்கும் ஜாம், ஜாம்'என்று திருமணம் செய்து வைத்தார். ஆனால் அந்தத் திருமணத்தில் பாகவதர் மேளம் வாசிக்கவில்லை; வேறு யாரோ வாசித்தார்கள்! ஆடு, பாம்பே!... 'உற்ற கலைமடந்தை இனுைம் ஒதுகிறாள்!" என்று அவ்வைப்பிராட்டி சொன்னாளல்லவா? அவளுடைய