பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 வாக்கை அப்படியே பின்பற்றித் தாம் தொழிலாகக் கொண்டுவிட்ட சங்கீதத்தை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் பயின்று வந்தவர் பாகவதர். அதனாலேயே அவருடைய சங்கீதம் கற்பனை வளம் மிகுந்ததாயிருந்ததோடு, 'ஒருசிலர் மட்டுமே கேட்டு அனுபவிக்கக் கூடியதாயிருந்த கர்நாடக சங்கீதத்தை மக்கள் அனைவருமே கேட்டு அனுபவிக்கக் கூடியதாகச் செய்தவர் பாகவதர்' என்று சித்துர் திரு. சுப்பிரமணியம் பிள்ளை அவர்களே பாராட்டும்படியாகவும் உயர்ந்திருந்தது. இத்தகைய உயர்வுக்குப் பாகவதரின் உழைப்பும் ஊக்கமும்தான் பெரும்பாலும் காரணமென்றாலும், புகழ் பெற்ற ஆலத்துர் சகோதரர்கள், பாபநாசம் சிவன், திருவாவடு துறை ராஜரத்தினம் பிள்ளை, விளாத்திகுளம் சுவாமிகள் ஆகியோரின் வழியை அவர் தக்க இடத்தில் தக்கவாறு பின்பற்றிப் பாடியதும் ஒரளவு காரணமாகும். ஒருசமயம் பாகவதர் விளாத்திகுளம் சுவாமி களுடன் திருச்சியிலிருந்து சென்னைக்குக் காரில் வந்து கொண்டிருந்தார். அப்படிவரும்போதெல்லாம் காரின் ஹாரனையே சுருதியாக வைத்துக்கொண்டு பாகவதரும் சுவாமிகளும் மாறிமாறிப் பாடிக் கொண்டே வருவது வழக்கம். அந்த வழக்கத்தை யொட்டி அன்றும் அவர்கள் பாடிக்கொண்டே வந்தார்கள். சென்னையில் தாம் தங்கியிருந்த பங்களாவுக்குப் பாகவதர், சுவாமிகளுடன் வந்து சேரும்போது இரவு மணி பத்துக்கு மேல் இருக்கும். தாங்கள் வருவதை அவர்கள் முன்கூட்டியே அறிவித்திருந்ததால், சாப்பாடு தயாரா யிருந்தது. இருவரும் சாப்பிட்டுவிட்டு மறுபடியும் பாட ஆரம்பித்தார்கள். சுவாமிகள் எப்போதுபாடினாலும் சண்முகப்பிரியா, சிந்து பைரவி, நாடகப்பிரியா, புன்னாகவராளி ஆகிய