பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 ராகங்களைத்தான் திரும்பத்திரும்பப் பாடுவார்கள். அவர்களுடன் பாடும்போது பாகவதரும் அதே ராகங்களைத் தான் திரும்பத்திரும்பப் பாடுவார். அன்றும் அப்படித்தான் நடந்து கொண்டிருந்தது. வராந்தாவில் உட்கார்ந்தபடி இதைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த வீட்டுச் சிப்பந்திகளில் ஒருவன் சுற்று முற்றும் பீதியுடன் பார்த்துக்கொண்டே சொன்னான். 'புன்னாகவராளியை யார் பாடினாலும் பாடலாம்; பாகவதர் பாடக்கூடாது. அதுவும் இந்த நேரத்தில், இந்த மாதிரி இடத்தில் உட்கார்ந்துகொண்டு அவர் அதைப் பாடவே கூடாது.' இன்னொருவன் கேட்டான்: 'ஏன், பாடினால் என்னவாம்? ' 'அதைச் சொன்னால் நீ இங்கே இவ்வளவு அமைதியாக உட்கார்ந்து கொண்டிருக்கமாட்டாய்; விழுந்தடித்துக் கொண்டு எழுந்து ஒடுவாய்' 'எங்கே, அதைச் சொல்லித்தான் பாரேன்?' 'அவசரப்படாதே! இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் சொல்லாமலே நீ அதைப்பார்ப்பாய்' அவன் இப்படிச் சொல்லி வாய்மூடியதுதான் தாமதம், ஸ்ஸ்ஸ்'என்று ஒரு சீறல் சத்தம் கேட்டது; அந்தச் சத்தத்தைத் தொடர்ந்து நல்லபாம்பு ஒன்று படம் எடுத்து ஆடிக்கொண்டே அவர்களை நோக்கி மெல்லமெல்ல நகர்ந்து வந்தது. அவ்வளவுதான்; 'பாம்பு பாம்பு' என்ற அலறிக் கொண்டே அவர்களில் சிலர் அங்கிருந்து தலைதெறிக்க ஒடினார்கள். 莎 இன்னும் சிலரோ 'ஆஹா ரசிகன் என்றால் இவனல்லவா உண்மையான ரசிகன் என்று சொல்லிக் கொண்டே அங்கு நின்று, அது ஆடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.