பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 வேறு சிலரோ, 'இந்தப் பாம்பு தன் தலையை ஆட்டுவது யாரையும் காக்காய் பிடிப்பதற்காக அல்ல என்று சர்வ நிச்சயமாகச் சொல்லிவிடலாம்' என்று சொல்லிச் சிரித்தார்கள். அதற்குள் கையில் கழியுடன் அங்கே ஓடிவந்த ஒருவர் ஆடிக்கொண்டிருந்த பாம்பை ஓர் அடி அடிக்க, அந்தச் சத்தத்தைக் கேட்டதும் பாகவதர் பாடுவதை நிறுத்திவிட்டு, 'அடிக்காதீர்கள், அதை அடிக்காதீர்கள்! ஆடியது அதன் குற்றமானால், அது ஆடும் படியாக பாடியது என்குற்றமல்லவா? "என்று சொல்லிக்கொண்டே அங்கு பறந்தோடி வந்தார். ஆனால் அதற்குள்... குறி தவறாமல் விழுந்த அடி அந்தப் பாம்பை குற்றுயிராகக் கூடவிட்டு வைக்கவில்லை; கொன்றே விட்டது பாகவதர் அழுதார்: நல்லபாம்பாயிருந்தால் என்ன, அவர் ஒரு நல்ல ரசிகனை இழந்துவிட்டார் அல்லவா? பாம்பை அடித்தவனுக்கு எப்படி இருந்திருக்கும்? அவன் தன் கையிலிருந்த கோலைக் கீழே விட்டெறிந்து விட்டு 'என்னை மன்னித்துவிடுங்கள்' என்றான் பாகவதரிடம். 'உன்னை மன்னித்தால் பாம்பு மறுபடியும் உயிர் பெற்று எழுந்துவிடுமா, என்ன அதெல்லாம் பொய்; மனிதர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதற்காகச் செய்து கொள்ளும் வார்த்தை ஜாலங்கள்' என்ற பாகவதர், 'இப்படித்தான் கெட்டவர்களிலும் நல்லவர்கள் இருக்கிறார் கள், என்பதை அறியாமல் இந்த உலகம் அவர்களில் பலரை அடிக்காமலே கொன்று விடுகிறது என்று தொடர்ந்து சொல்லிப் பெருமூச்சு விட்டார். அப்புறம் என்ன?