பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 பாகவதர் கையாலேயே அந்தப்பாம்பு அடக்கம் செய்யப்பட்டது; அவருடைய கையாலேயே அதற்குப் பாலும் வார்க்கப்பட்டது. எல்லாம் முடிந்து திரும்பிப் பார்த்தால், கண்ணில் நீர்வடிய விளாத்திகுளம் சுவாமிகள்,நின்று கொண்டிருந்தார். சங்கீதத்தில் மகா மேதையான அவர்கள் கண்களில் நீரைக் கண்டதும் பாகவதருக்கு ஒன்றுமே புரியவில்லை. "என்ன சுவாமி, என்ன?' என்று பதறிப்போய் கேட்டார். 'ஒன்றுமில்லை; என்னுடைய ஊர்பாம்புகள் நிறைந்த ஊர். அங்கே நானும் எத்தனையோ இரவுகள் உட்கார்ந்து புன்னாகவராளி பாடியிருக்கிறேன்.இப்படி ஒரு பாம்பு வந்து என்பாட்டை ரசித்து நான் பார்த்ததே இல்லை. இதுவோ பட்டணம்; இங்கே பாம்பு அபூர்வம். இப்படிப்பட்ட இடத்தில் இன்றிரவு நீர் உட்கார்ந்து புன்னாகவராளி பாடியிருக்கிறீர். அதைக்கேட்டு ரசிக்க ஒரு பாம்பும் வந்திருக் கிறதென்றால் என்ன அத்தாட்சி வேண்டும் ஆண்டவன் உமக்கே உமக்கென்று அளித் திருக்கும் இந்த வரப்பிரசாதத்தை ஒரு கணம் எண்ணிப் பார்த்தேன்; என் கண்களில் என்னையும் அறியாமல் நீர் சுரந்துவிட்டது'என்றார் சுவாமிகள். 'அப்படியா நீங்கள் அப்படி நினைக்கிறீர்கள்; நான் எப்படி நினைக்கிறேன், தெரியுமா? " என்றார் பாகவதர் புன்னகையுடன். "எப்படி?' என்றார் சுவாமிகள். 'எல்லாம் உங்களுடைய வரப்பிரசாதம் என்று நினைக்கிறேன்' என்றார் பாகவதர். ஆம், ஒரு மேதை தம்மை மேதை என்று சொன்ன போதுகூட அவருடைய தலை கனக்கவில்லை; மார்பு புடைக்கவில்லை. எல்லாம் எப்போதும்போல அப்படி அப்படியே இருந்தன. இந்தக் காலத்தில் யார் அப்படியே இருக்கிறார்கள்?