பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 இந்த நிலையில் தம்மை மறந்து தம் மனத்தை எங்கெல்லாமோ அடிக்கடி அலைய விட்டுக்கொண்டிருந்த அவர், ஒரு நாள் இரவு குளிக்கும் அறைக்குச் செல்ல வேண்டிய அவசியம் நேர்ந்தது. அவர் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் தடால்"என்று ஒரு சத்தம். 'என்ன ஐயா, என்ன?" என்று திடுக்கிட்டுக் கேட்டுக்கொண்டே அவருக்கு உதவியாக ஊரிலிருந்து வந்திருந்த சிறுவனான ராமன் ஒடிப் போய்ப் பார்த்தான். வழுக்கி விழுந்த அவருடைய தலையை அங்கிருந்த வாளி வெட்டியிருந்தது. பெருகி உறைந்த ரத்தத்துக்கிடையே அவருடைய உயிரற்ற உடல் விழுந்து கிடந்தது. அந்தக் கோலத்தில் அவரைக் கண்டதும் பயந்துபோன சிறுவன், 'பாகவதர் ஐயா, இங்கே ஒடி வாருங்களேன்! பாகவதர் ஐயா, இங்கே ஓடி வாருங் களேன்' என்று குரல் கொடுத்தான். 'என்ன ராமா, என்ன?’ என்று கேட்டுக்கொண்டே வந்து பார்த்த பாகவதர், 'அப்பா!' என்று ஓர் அலறு அலறி அவர் மேல் விழுந்து அவருடைய மார்பில் தம் முகத்தைப் புதைத்துக் கொண்டது தான் தாமதம், அவருடன் அந்த விடுதியில் தங்கியிருந்த அனைவரும் எழுந்து ஒடோடியும் வந்து அவரைச் சூழ்ந்து கொண்டனர். விஷயம் தம் காதுக்கு எட்டியதும் திரு. ஒன்னுக் கோனும் விரைந்து வந்தார். "வருத்தப்படாதீர்கள்; இறப்பும் பிறப்பும் வாழ்க்கை நதியின் இருகரைகள் தானே?' என்று சொல்லி அவர் பாகவதரை ஒருவாறு தேற்றி, 'உங்கள் தாயாருக்கும் சகோதரர்களுக்கும் தந்தி கொடுத்து விடட்டுமா? அவர்கள் வந்ததும் இவரை இங்கேயே அடக்கம் செய்து விடலாம் என்றார். 'அது அவ்வளவு சரியில்லை. இவர் பிறந்து வளர்ந்தது திருச்சியில். இவரைக் கடைசி முறையாகப்