பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 பார்க்கவிரும்புபவர்கள் பலர் அங்கே இருப்பவர்கள். அவர்களுக்காகவாவது இவரை நாம் அங்கேகொண்டு போய்த்தான் அடக்கம் செய்யவேண்டும்' என்றார் பாகவதர் கலங்கிய கண்களுடன். "இலங்கையிலிருந்து இதை இந்தியாவுக்கு எடுத்துக் கொண்டு போவதென்பது அவ்வளவு சுலபமில்லையே?’’ 'முயன்று பாருங்கள்; அதற்காக எவ்வளவு செலவா னாலும் பரவாயில்லை. ’’ 'இதற்குச் செலவுகூட அவ்வளவு முக்கியமில்லை; சர்க்காரிடம் செல்வாக்குள்ள யாருடைய உதவியாவது நமக்கு உடனே கிடைப்பதுதான் முக்கியம். அதற்கு யாரைப் பிடிக்கலாம் என்பது தான் இப்போது என்னுடைய யோசனை!" பாகவதர் ஒரு கணம் யோசித்தார்; மறுகணம், 'தவமணி தேவியின் தந்தை கதிரேசன் இருக்கிறாரே, அவர் பிரபல வக்கீல் அல்லவா? அவரைப்பிடித்துப்பாருங்களேன்' 'யாரைப் பிடித்தாலும் சரி; இவர் திடீரென்று மரணமடைந்திருப்பதால் இவருடைய சடலத்தை இங்கே சோதித்துப் பார்க்காமல் நம்மிடம் கொடுக்கமாட்டார்கள்." 'யார் எப்படி வேண்டுமானாலும் சோதித்துப் பார்த்துக்கொள்ளட்டும்; கடைசியாக இவரை நம்மிடம் ஒப்படைத்தால் சரி' என்றார் பாகவதர். எதற்கும் நான் போய் கதிரேசனைப் பார்த்துவிட்டு வருகிறேன். நீங்கள் இங்கேயே இருங்கள்' என்று சொல்லிவிட்டு ஒன்னுக்கோன் புறப்பட்டார். அப்போதிருந்த நிலையில் அவர் புறப்பட்ட நிமிஷத்திலிருந்தே பாகவதர் அவரை ஒவ்வொரு நிமிஷமும் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார். அந்த மட்டும் திரு. கதிரேசன் பாகவதரைக் கைவிட வில்லை; பெருமுயற்சி செய்து அவர் தம் தந்தையாரின்