பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 0 102 காட்சி 14

இடம் : கழக வரவேற்வு வளைவிடம் நேரம் : காலை உறுப்பினர் : சொற்கோ தலைமையில் மாணவர்

பட்டாளம்

மாணவர் கூட்டம் பல்கலைக்கழக வாயிலை அடைத்துக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் யாரும் உள்ளே செல்லாமல் கூட்டமாக நின்று கோஷமிடுகின்றனர். சிலர் செய்வதறியாது வீடு திரும்புகின்றனர்; ஆசிரியர்களோ, மாணவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் அஞ்சி, அவசரமாக உள்ளே நுழைகின்றனர். வீணா, தோகை வஞ்சி முதலிய பெண்களும் போராட்டத்தில் பங்கேற்கின்றனர். தோளில் ஒலிபெருக்கியைச் சுமந்த வண்ணம் சொற்கோ பேசுகின்றான். சொற்கோ:

என் உயிரினும் இனிய

மாணவநண்பர்களே!

நான் -

தலைவணங்கும்

தாய்க்குலமே!

மாணவர் போராட்டம்

மூன்று வகைப்படும்,

ஒன்று -

தானாக வெடிப்பது,

இரண்டு

பிறர் தூண்டுதலால்

ஏற்படுவது,

மூனறு -

நிர்வாகத்தால்

நம்மீது

திணிக்கப்படுவது,

இப்போராட்டம்

மூன்றாவது வகையைச் சார்ந்தது,

நாம் -

கல்விக்காகச்