பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 0 முருகுகந்தரம்

செலவிடும் பணம் நம் பெற்றோர்களின் வியர்வை,

பெருமூச்சு, என்பதை நானறிவேன், நாம் -

போராட்டத்தைத் தேடி அலையவில்லை போராட்டம்

நம்மைத் தேடிவந்திருக்கிறது மாணவர்களாகிய நமக்கு அடிப்படைத் தேவை சோறும் நீரும்! விடுதிச் சோறு விலையதிகம் என்றாலும் அதைத் தூய்மையாகக் கேட்கிறோம். குழாயைத் திறந்தால் தண்ணி வரவேண்டும் இவற்றைக் கொடுக்க முடியாத விடுதிக்காப்பாளரை மாற்று என்று கேட்பதில் என்ன குற்றம்? பட்டம் பெறவந்த பல்கலை மாணவர்களைக் கழுதை யென்று சொல்லலாமா? என்ன வாய்க் கொழுப்பு? அந்தப் பேராசிரியரை உடனே - மாற்ற வேண்டும் என்று கேட்பதிலே என்ன தவறு? மாணவர் கூட்டமெனும் மதயானைகளை மண்டியிடச் செய்யும் அங்குசம்