பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 0 முருகுசுந்தரம்

இலக்கியத்தை-கவிதையை எளிமை செய்து பெரும்பான்மை மக்களின் அருகாமையில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்ற முயற்சி வந்துள்ளது. அந்த முயற்சிதான் கவிதையையும் செய்யுளையும் பிரித்தறியும் முயற்சி வசனத்தையும் கவிதையையும் ஒன்று சேர்க்கும் முயற்சி; யாப்போசையைக் குறைத்து, பேச்சோசையைச் சேர்க்கும் முயற்சி

6

"மஹாகவியும் தமிழ்க் கவிதையும்” என்னும் கட்டுரையில் சண்முகம் சிவலிங்கம் பாரதி பற்றித் தரும் ஒரு குறிப்பு முக்கியமானது. “பாரதியைப் பொறுத்த வரையில், பரந்துபட்ட ம்க்களின் சமூக அரசியல்.விழிப் புணர்ச்சிக்கும், போராட்டத்திற்கும் தமிழ்ச் செய்யுளையும் கவிதையையும் அழைத்ததே அவருடைய தன்மைப்பாடு” (மஹாகவியின் கோடை ப. 80). என்பது சிவலிங்கம் தரும் குறிப்பு. இந்தத் 'தன்ன்மப்பாடு பாவேந்தரிடமும் இருந்ததது. பாவேந்தருக்குப் பிறகு இந்தத் தன்மைப்பாடு தமிழ்க் கவிதை உலகில் தேய்ந்து இற்றுப் போகும் நிலைக்கு வந்திருப்பதுதான் கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் என்னைப் போன்றோர் நம்பிக்கை இழந்துவிடவில்லை. 1972-ஜன-பிப் 'தீபம்’ இதழில் கவிதைபற்றிய ஒரு விவாதத்தில் எனது நம்பிக்கையைப் பின்வருமாறு தெரிவித்திருந்தேன். "எதிர்காலத் தமிழ்க் கவிதையில் மனிதநேயம், சர்வதேசியம், சோசலிசம், நடப்பியல், ஆகியன பின்னிப்பிணைந்திருக்க வேண்டும்." என்னுடையதும், என்போன்ற பலருடையதுமான எதிர்காலத் தமிழ்க் கவிதைபற்றிய நம்பிக்கைகள் பொய்யாகிவிடவில்லை என்பதற்கான ஒளிக்கீற்றுக்கள் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் கவிஞர் முருகுசுந்தரம் அளித்துள்ள எரிநட்சத்திரம்'.

7

கா. ரீ.ரீ வழியே காண்டேகரைத் தரிசித்து மகிழ்ந்த தமிழ்வாசகர்களுக்கு எரிநட்சத்திரம்' என்ற பெயர் அவ்வளவு