பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 0 முருகுகந்தரம் காட்சி 10

இடம் : பல்கலைக் கழக நாடக அரங்கம் நேரம் : முன்னிரவு உறுப்பினர் : நம்பி, வீணா, சிறுவன்

பல்கலைக்கழகத்தின் கலைவிழா, விழாவின் ஒரு பகுதியாக நாடக மொன்று அரங்கேற்றப் படுகிறது. நாடக அரங்கம் நிரம்பி வழிகிறது. மேடையின் ஒரு பக்கத்திலிருந்து இன்னிசை மிதந்து வருகிறது. பல்கலைக் கழக மாணவர்கள் அந்த நாடகத்தில் பங்கேற்று நடிக்கின்ற்னர். நாடகம் தொடங்கப் படுவதற்குமுன், அந்நாடகத்தைப்பற்றிய குறிப்புகள் ஒலி பெருக்கியில் அறிவிக்கப்படுகின்றன. ஒலிபெருக்கி:

இந்த ஒரங்க நாடகம்

பழைய மதுச் சாறுதான்.

ஆனால்

குவளைபுதியது.

மதுச்சற்றின்

குணம கூட

மாற்றப்பட்டுள்ளது.

இந்நாடகம்

தமிழ்ப் பேராசிரியர்

மேகலையின் கைவண்ணம்,

இதிகாசத்தில்

வெறும்

கூட்டுப்புழுவாக இருந்த

தகுந்தலை _

இந்த நாடகத்தில்

சிறகடித்துப் பறக்கும்

வண்டாகிறாள்.

கொட்டவும் செய்கிறாள்.

பெண்ணியம்

இந் நாடகத்தில்

புதிய பரிமாணத்தைப் பெறுகிறது.