பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கிய ஆதாரங்கள்

93

 உழுபடையும் பொருபடையும் :

'சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை வெள்ளைக்குடி நாகனார் பாடிப் பழஞ் செய்க்கடன் வீடு கொண்டது' என்ற குறிப்புடன் புறநானூற்றில் உள்ள 35-ஆம் பாடலைக் கொண்டு இவ் வரலாறு அமைக்கப் பெற்றது.

அந்தப் பாடல் வருமாறு :

  நளிஇரு முந்நீர் ஏணி யாக
  வளியிடை வழங்கா வானம் சூடிய
  மண்திணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர்
  முரசுமுழங்கு தானை மூவ ருள்ளும்
  அரசெனப் படுவது நினதே பெரும ;
  அலங்குகதிர்க் கனலி நால்வயிற் றோன்றினும்
  இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
  அந்தண் காவிரி வந்துகவர் பூட்டத்
  தோடுகொள் வேலின் தோற்றம் போல
  ஆடுகட் கரும்பின் வெண்பூ நுடங்கும்
  நாடெனப் படுவது நினதே யத்தை ; ஆங்க
  நாடுகெழு செல்வத்துப் பீடுகெழு வேந்தே,
  நினவ கூறுவல் ; எனவ கேண்மதி :
  அறம்புரிந் தன்ன செங்கோல் நாட்டத்து
  முறைவேண்டு பொழுதிற் பதன் எளி யோர்ஈண்டு
  உறைவேண்டு பொழுதிற் பெயல்பெற் றோரே ;
  ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மூ
  மாக விசும்பின் நடுவுநின் றாங்குக்
  கண்பொர விளங்குநின் விண்பொரு வியன்குடை
  வெயில் மறைக் கொண்டன்றோ அன்றே ; வருந்திய
  குடிமறைப் பதுவே, கூர்வேல் வளவ,
  வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்பக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/101&oldid=1530039" இலிருந்து மீள்விக்கப்பட்டது