பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கிய ஆதாரங்கள்

97



  செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி
  ஒலியல் மாலையொடு பொலியச் சூடிப்
  பாடின் தெண்கிணை கறங்கக் காண்டக
  நாடுகெழு திருவிற் பசும்பூட் செழியன்
  பீடும் செம்மலும் அறியார் கூடிப்
  பொருதும் என்று தன்றலை வந்த
  புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க
  ஒருதான் ஆகிப் பொருதுகளத் தடலே !

--புறநானூறு, 76, இடைக்குன்றுார் கிழார் பாடல்.
குடபுல வியனார் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு அறிவுறுத்திக் கூறிய பாட்டு வருமாறு :

  முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
  பரந்துபட்ட வியன் ஞாலம்
  தாளிற் றந்து தம்புகழ் நிறீஇ
  ஒரு தாம் ஆகிய உரவோர் உம்பல்,
  ஒன்றுபத் தடுக்கிய கோடிகடை இரீஇய
  பெருமைத் தாகநின் ஆயுள் தானே !
  நீர்த்தாழ்ந்த குறுங்காஞ்சிப்
  பூக்கதூஉம் இனவாளை
  நுண்ணாரற் பருவராற்
  குரூஉக்கெடிற்ற குண்டகழி
  வான் உட்கும் வடிநீண்மதில்
  மல்லல்மூதூர் வயவேந்தே,
  செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்
  ஞாலம் காவலர் தோல்வலி முருக்கி
  ஒரு நீ யாகல் வேண்டினும் மற்றதன்
  தகுதி கேள்இனி : மிகுதி யாள,
  நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்
  உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/105&oldid=1530031" இலிருந்து மீள்விக்கப்பட்டது