பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

எல்லாம் தமிழ்


  உண்டி முதற்றே உணவின் பிண்டம் ,
  உணவெனப் படுவது நிலத்தொடு நீரே;
  நீரும் நிலனும் புணரி யோர்ஈண்டு
  உடம்பும் உயிரும் படைத்திசி னோரே;
  வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
  வைப்பிற் றாயினும், நண்ணி ஆளும்
  இறைவன் தாட்குத வாதே; அதனால்,
  அடுபோர்ச் செழிய; இகழாது வல்லே
  நிலன்நெளி மருங்கில் நீர்நிலை பெருகத்
  தட்டோர் அம்ம இவண்தட் டோரே ;
 தள்ளா தோர் இவண் தள்ளா தோரே.

--புறநானூறு, 18.

தாயின் பிரார்த்தனை :

இந்த வரலாற்றுக்கு மூலமாகிய ஐங்குறுநூறு 5-ஆம் பாடல், 'புறத்தொழுக்கிலே நெடுநாள் ஒழுகி, " இது தகாது " எனத் தெளிந்த மனத்தனாய் மீண்டு தலைவியோடு கூடி ஒழுகா நின்ற தலைமகன் தோழியோடு சொல்லாடி, யான் அவ்வாறு ஒழுக நீயிர் நினைத்த திறம் யாது ?" என்றாற்கு அவள் சொல்லியது' என்ற குறிப்போடு உள்ளது.

முதலைப் போத்தைப் பற்றிய செய்தியை உள்ளுறை உவமமாக்கி, 'என்றது ஒருங்கு வாழ்வாரைப் பழமை நோக்காது உயிர் கவர்வான் என்பதாம்' என்று விளக்குவார் பழைய உரைகாரர்.

அன்புப் பார்வை :

தொண்டை மண்டல சதகத்தில் உள்ள 13-ஆம் பாட்டு இவ் வரலாற்றுக்கு ஆதாரம். பாட்டு முழுவதும் பின்வருமாறு :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/106&oldid=1530032" இலிருந்து மீள்விக்கப்பட்டது