பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் இட்ட சாபம்

5

னாள். ஆற்றங்கரையில் யாரோ சிலர் வந்துகொண்டிருந்தனர். அவர்களுடைய பேச்சில் சினம் ஒலித்தது. யார் அங்கே?' என்று அதட்டும் குரல் கேட்டது. அவர்கள் நீராடும் துறையை அணுகிக்கொண்டிருந்தனர்; அருகிலே வந்துவிட்டார்கள்.

"யார் நீ?"

”ஏன்?” என்று கேட்டாள் அவள். "அது என்ன?” என்று அவர்கள் வினவினார்கள். -

தெரியவில்லையா? மாங்காய்தான்."

”ஏது?”

”கிடைத்தது.”

எங்கே?"

“இங்கேதான்.”

வந்தவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். கரை மேலே கிடந்த மாவிலைக் கொத்து அவர்கள் கண்ணில் பட்டது. அதை ஒருவன் எடுத்தான். ”இது இங்கே எப்படி வந்தது?" என்று கேட்டான் அவன்.

"மாங்காய் வந்ததுபோல அதுவும் வந்தது" என்றாள் அவள்.

"மாங்காயாவது, வரவாவது ! இது அரண்மனைத் தோட்டத்து மாங்காய், அதுவும் காவல் மரத்துக் காய். இதை நீ தொட்டதே தவறு ; அதோடு துணிச் சலாகத் தின்கிறாய். வா, அரசனிடம். நீ திருடி வந்திருக்கலாம்; அல்லது உன் காதலன் திருடிக்கொண்டு வந்து தந்திருக்கலாம்.”

"என்ன, வாய்க்கு வந்ததைப் பேசுகிறீர்கள்?" என்று சீறிய பெண் புலிபோல அவள் கேட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/13&oldid=1528913" இலிருந்து மீள்விக்கப்பட்டது