பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் இட்ட சாபம்

7

கனியும் முதல் கனியை நன்னன் தன் குலதெய்வத்துக்கு நிவேதித்து உண்பான். ஆற்றங்கரையிலே இருந்தது காவல் தோட்டம்.

அந்த ஆண்டு, மரம் நன்றாகப் பூத்திருந்தது. ஆற்றோரமாக இருந்த கிளையில் ஒரு பெரிய காய், காய்த்திருந்தது. கடவுட் பூசைக்கு உரியது அந்தக் காய் என்று குறித்து வைத்திருந்தனர் காவலாளர். அன்று காலையில் வந்து பார்க்கையில் காயைக் காணவில்லை. அவர்கள் குழம்பினர்கள். தங்கள் காவல். வீணயிற்றென்று மறுகினார்கள். அரசனுக்கு என்ன விடை சொல்வதென்று அஞ்சினார்கள். எங்கே போயிருக்கும் என்று ஆராயப் புறப்பட்டார்கள். அவர்கள் ஆராய்ச்சியில் அகப்பட்டாள் முன்சொன்ன மங்கை, நல்லாள்.

”உள்ளதைச் சொல்லிவிடு” என்று அவளிடம் காவலாளர் கூறினர்.

”ஆற்றோடு வந்தது; எடுத்துத் தின்றேன்" என்றாள் அவள்.

”இல்லை, இல்லை. யாரோ இதைத் திருட்டுத் தனமாகப் பறித்துக் கொண்டுவந்து உனக்குக் கொடுத்திருக்கிறார்கள். கள்வன் இன்னனொன்று சொல். உன்னை விட்டு விடுகிருேம்.”

”அப்படி ஒருவரையும் நான் அறியேன்.”

"அப்படியானல் நீதான் கள்வியா?"

"கள்வியா! ஆற்றிலே வந்த காயை எடுப்பதற்கு எனக்கு உரிமை இல்லையா? கைக்கு எட்டினதை வாய்க்கு எட்டச் செய்வது தவறா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/15&oldid=716588" இலிருந்து மீள்விக்கப்பட்டது