பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

எல்லாம் தமிழ்

"அது எப்படிச் சொல்லலாம்? இவள் அழகிய பெண்ணாக இருக்கிறா ளென்பதற்காகக் குற்றத்தை மறந்துவிடலாமா? இவள் செய்த குற்றத்துக்கு முன் இவள் அழகும் இளமையும் நில்லா. இவள் துணிவைத்தான் நாம் நினைக்கவேண்டும்.”

"அரசே, மற்றவர்கள் குற்றம் செய்ததாகத் தெரிந்தாலே பன்முறை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இளம்பிள்ளைகளும் மங்கையரும் முதியவரும் குற்றம் செய்ததாக விரைவிலே முடிவு கட்டக்கூடாது."

"குற்றம் செய்தவள் இவள்தான் என்பதில் ஐயமே இல்லை. அதைப்பற்றிய விவாதத்துக்கும் இடம் இல்லை. இவளுக்குரிய தண்டனையைத்தான் நாம் நிச்சயிக்க வேண்டும்" என்று அரசன் கூறிய போது அங்கு இருந்த முதியோர் அஞ்சிப் பெருமூச்சு விட்டனர்.

"தண்டனையைப் பற்றிக்கூட ஐயம் இல்லை. அரச குலத்தின் உயிராகிய காவல் மரத்தை வெட்டியதற்குச் சமானமான குற்றம் இது. இதற்குரிய தண்டனை சாதாரணமாக இருக்க முடியாது. எது கடுமையான தண்டனையோ அதைத்தான் இதற்கு விதிக்க வேண்டும். ஆம், கொலைத் தண்டனைதான் இதற்கு ஏற்றது" என்று அரசன் தீர்ப்பு அளித்தான். முதியவர்கள் கண்களை மூடிக்கொண்டார்கள். பழி சுமத்தப்பட்ட பெண் ஆ! என்று அரற்றிக் கீழே விழுந்தாள். அரசன் எழுந்து சென்றுவிட்டான்.

4

கொலைத் தண்டனையை இன்னும் நிறைவேற்றவில்லை. அதற்குள் அரசனுடைய கோபத்தைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/20&oldid=1528945" இலிருந்து மீள்விக்கப்பட்டது