பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

எல்லாம் தமிழ்

"அந்தப் பெண்ணின் உயிர்கூட அந்தக் காயைத் தர முடியாதே!" என்றார் அவையத்தார்.

"அந்த உயிரை வாங்கினால் இனி இத்தகைய குற்றம் நடவாது!" என்று கோபத்தோடு பேசினான் நன்னன்.

"இந்தப் பாவையை ஏற்றுத் தண்டனையை மாற்றினால் நாடு அரசர்பிரானைப் போற்றும். மன்னர் பிரானுடைய கருணையின் உயர்வை அறிந்து குடிமக்கள் வாழ்த்துவார்கள்."

"இல்லாவிட்டால்?"

"அதை நாங்கள் சொல்வானேன்? புலவர்களைப் பாதுகாக்கும் பெருங்குடியில் வந்த பெண் அவள்."

"புலவர்கள் இச்சகம் பேச, மகிழ்ந்த குடி போலும்!"

"அரசே, புலவர்களை இழித்துப் பேசுவது தமிழ் மகனுக்கு அழகன்று."

"குற்றம் செய்த குடிக்கு வேண்டியவர்களென்று நீங்கள் சொன்னீர்களே!"

"அது அல்ல, நாங்கள் சொன்னது; புலவர்கள் இந்த நாட்டுக்கு மாத்திரம் உரியவர்கள் அல்ல. அவர்களுக்கு யாதும் ஊர்; யாவரும் கேளிர். அவர்கள் உள்ளம் புண்படும் செயல் இது. இதன் விளைவு அரசர் பிரானது புகழுக்கு மாசாக முடியும்.”

அதற்குள் இன்னும் சிலர் அங்கே வந்தார்கள். பொற் பாவையைத் தண்டமாக இறுப்பதோடு யானைகளையும் கொடுப்பதாக அவர்கள் சொன்னர்கள்; புலவர்களும் சான்றோர்களும் சேர்ந்து இதை ஏற்பாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/22&oldid=1405310" இலிருந்து மீள்விக்கப்பட்டது