பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

எல்லாம் தமிழ்


விட்டான்; தண்டனையை நிறைவேற்றினான். அன்று முதல் அவனைப் பழி சூழ்ந்தது.

பெண்ணுககுப் பரிந்து எழுந்த புலவர் உலகம் அதற்குப் பழி வாங்க நினைந்தது. “இனி இவன் முகத்தையும் பாரோம். இவனைப் பற்றி ஒரு வார்த்தை பேச மாட்டோம். அப்படி இவனைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் கடுஞ் சொல்லால் இவன் பழியைப் பாடுவோம். இவன் மரபிலே பிறந்தவர்களையும் எமக்குப் பின்வரும் புலவர் பாடா தொழிக! பெண் கொலை புரிந்த நன்னனுக்கு இனி உய்வில்லை. உலகில் பழி சேரும் ; மறுமையில் நரகந்தான் கிடைக்கும்” என்று கூடிப் பேசினர்; “நம்முடைய செந்நாவை நன்னனைப் பாடி மாசுபடுத்த மாட்டோம்” என்று விரதம் பூண்டனர்.

5

இரக்கம் இன்றிப் பெண் கொலை செய்த கொடியவன், போலி நீதி பேசிய புல்லன், புலவர் சாபத்துக்குட்பட்ட பாவி என்று உலகம் நன்னனைக் கூறத் தொடங்கியது. அவன் அதிகக் காலம் வாழவில்லை. சில ஆண்டுகளுக்குள் கோசர் என்ற வீரர் அந் நாட்டின்மேல் படையெடுத்து நன்னனைக் கொன்று, அவன் மாமரத்தையும் வெட்டினர். அவன் உலகிலிருந்து போனாலும் அவன் பழி போகவில்லை. யாரையாவது வைவதாக இருந்தால், “நன்னனுக்குக் கிடைத்த நரகம் உனக்குக் கிடைக்கட்டும்” என்று வைதனர் தமிழ் மக்கள்.

நன்னன் செய்த கொலைப்பாவம் அவனுக்கு நரகமும் பழியும் வாங்கித் தந்தது பெரிதல்ல; அவன் பரம்பரையிலே பிறந்தவர்களையும் அது தாக்கியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/24&oldid=1392915" இலிருந்து மீள்விக்கப்பட்டது