பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் இட்ட சாபம்

17



இளவிச்சிக்கோ என்பவன் நன்னன் வழி வந்தவன். அவனும் இளங்கண்டீரக்கோ என்பவனும் ஓர் இடத்தில் இருந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பெருந்தலைச் சாத்தனர் என்ற புலவர் அங்கே சென்றார். சென்று, இளங்கண்டீரக்கோவை மாத்திரம் தழுவி ஆசி கூறி அமர்ந்தார். இளவிச்சிக்கோ, தன்னை அவர் தழுவாததற்குக் காரணம் தெரியாமல் விழித்தான். “நான் என்ன குறை உடையேன்?”என்று அவன் புலவரைக் கேட்டான்.

“இவன் பரம்பரையாகப் புலவரைப் பாதுகாப்பவன். வீட்டிலே ஆடவர் இல்லாமற் போனாலும், மகளிர் வந்தவரை உபசரித்துப் பரிசில் தந்து புகழ் பெறுவது இவன் குலம். அதனுல் இவனைத் தழுவினேன். உன் குலத்தைப் பற்றி நான் என்ன சொல்வது? பெண் கொலை புரிந்த நன்னனின் வழி வந்தவன் நீ. புலவரை அவமதிப்பதில் சிறந்த குடியிலே பிறந்தவன். புலவர்கள் புகாத வீடு உங்கள் வீடு. அதனால் உங்களை எங்கள் கூட்டத்தார் பாடுவதை விட்டுவிட்டார்கள்” என்று அவர் சொல்வதைக் கேட்டு இடிவிழுந்து போனான் இளவரசன்.

நன்னன் பூண்ட பழியும் புலவர் இட்ட சாபமும் நன்னனோடு நில்லாமல் அவன் பரம்பரையையும் சுட்டன.

எல்-2
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/25&oldid=1528956" இலிருந்து மீள்விக்கப்பட்டது