பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோறு அளித்த சேரன்

19



நாட்டு மக்களும் இரு கட்சிகளிலும் சேர்ந்து போரிட்டனர். போர் நிகழ்ச்சியில் வேளாண்மை முதலிய முயற்சிகள் சுருங்கின. பதினெட்டு நாள் போராடினாலும் அதற்கு முன்னே பல பல ஏற்பாடுகள் நடந்தமையால் இந்த நிலை வந்துவிட்டது. போர், அறப் போராக, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடை பெற்றது.

பாரதப் போரில் ஈடுபட்ட வீரர்களுக்கு உணவு போதாது என்ற செய்தி தமிழ்நாட்டு மன்னன் காதுக்கு எட்டியது. தமிழ் வீரர்களிலே சிலரும் பாரதப் போரில் ஈடுபட்டிருந்தனர். அக்காலத்தில் தமிழ்நாட்டின் பெரும் பகுதியை உதியஞ் சேரலாதன் என்ற சேரமன்னன் ஆண்டுவந்தான். தமிழ்நாடு நெல்லும் கரும்பும் விளையும் நாடு. பாரதப் போர் வீரர்களுக்கு அரிசி அனுப்பும் காரியத்தைச் சேர மன்னன் மேற் கொண்டான். ஒரு கட்சியினருக்குத்தான் உணவு தருவேன் என்று சொல்லவில்லை. தர்ம யுத்தத்தில் தர்ம நெறியுடையார் வெல்வார் என்ற உறுதி யாவருக்கும் இருந்தது. பசித்தவன் யாராக இருந்தாலும், பகைவகை இருந்தாலும் அவன் பசியைப் போக்குவது அறமென்பது சான்றோர் கொள்கை.

சேரலாதன் இத்தகைய உள்ளம் படைத்தவன். இருவகைப் படைக்கும் போதிய உணவு அளிப்பதே தன் கடமை என்று உணர்ந்து, போர் முடியும் வரைக்கும் அப்படியே செய்து வந்தான். இந்தப் பெருஞ் செயல் காரணமாக அவன் புகழ் பாரத நாடு முழுவதும் பரவியது. பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் என்று அவனை யாவரும் வழங்கலாயினர். முரஞ்சியூர் முடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/27&oldid=1392942" இலிருந்து மீள்விக்கப்பட்டது