பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

எல்லாம் தமிழ்

நாகராயர் வடநாட்டு யாத்திரையில் வடநாட்டுப் பெருமையை உணர்ந்ததோடு, அங்குள்ளார் தமிழ் மன்னன் வண்மையைப் போற்றக்கேட்டு அம் மன்னன் பெருமையையும் நன்கு உணர்ந்தார்.

வடநாட்டில் அவரிடம் சேரனைப்பற்றிய செய்திகளை ஆவலோடு பலரும் கேட்கலாயினர். .

"உங்கள் நாட்டில் போரே இல்லையா?

"இல்லை. பகைவரே இல்லை. அதனால் போரும் இல்லை."

"அது எப்படிச் சாத்தியம் ஆகும்?"

"எங்கள் அரசனுடைய இயல்புகள் பகையில்லா மற் செய்துவிடுகின்றன. அப்படிச் சிறு பகை எங்கே னும் இருந்தால் அவர்களை ஒடுக்கும் படைவன்மை எங்கள் அரசனுக்கு உண்டு."

பகைவர் இல்லாமல் ஒரு நாடு இருக்க முடி யுமோ?!

"பகைமை கொண்டு எவரேனும் தவறு செய்தால் சிறு தவறு காரணமாகப் பெரிய போரைத் தொடங்குவது எங்கள் மன்னன் வழக்கம் அன்று. அப்பகை வரைப் பொறுத்தருள்வான். போற்றாரைப் பொறுக்கும் திறத்தில் அவன் பூமிக்குச் சமானம் ஆனவன்."

"அவன் பொறுமை உடையவனாக இருக்கலாம். ஆனால் பகைவர் செய்யும் தீங்கு மிகுதியாகிவிட்டால் அரசனாக இருப்பவன் சும்மா இருக்கலாமா?"

"அளவுக்கு மிஞ்சிப்போனால் உடனே போரைத் தொடங்க மாட்டான். ஒன்றும் செய்யாமல் வாளா இருக்கவும் மாட்டான். 'எப்படிப் போர் நடத்தலாம்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/28&oldid=1528962" இலிருந்து மீள்விக்கப்பட்டது