பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

எல்லாம் தமிழ்

"அல்ல, அல்ல. போர்மூண்ட பின்னரும் தம் பிழையை உணர்ந்து வழிபடும் பகைவர்களை, நீரைப் போலக் குளிர்ந்த உள்ளத்தோடே ஏற்றுக்கொண்டு நன்மை செய்யும் உத்தமன் அவன்."

"ஆ! எங்கும் கேளாத பெருமையாக அல்லவா இருக்கிறது? உலகமெல்லாம் ஐந்து வகையான பூதத்தின் சேர்க்கை என்று சொல்லுகிருர்கள். உலகத்தைக் காக்க வந்த உங்கள் அரசனும் ஐம்பூதங்களின் இயற்கையை உடையவனாக இருக்கிறான். நிலத்தைப் போன்ற பொறையும், விசும்பைப் போன்ற சூழ்ச்சியும், வளியைப்போன்ற வலியும், தீயைப்போன்ற தெறலும், நீரைப்போன்ற அளியும் அவன்பால் இருக்கின்றன என்று தெரிகிறது. அவன் நாட்டின் விரிவு எப்படி?”

“அவன் அன்பு நிறைந்த ஆட்சியில் சூரியன் மகிழ்கிறான். அவனுக்குரிய கீழ்கடலிலே உதயமாகி, அவனுக்குரிய மேல் கடலிலே மறைகிறான்."

"இரு கடலுக்கும் இடைப்பட்ட நாடென்று சொல்கிறீர்கள். அவன் நாட்டு வளப்பம் எங்களுக்குத் தெரிந்ததே. அவன் புகழை வடநாட்டார் அறிந்தது கிடக்கட்டும். போரில் மாய்ந்து வீர சுவர்க்கம் புக்கவர்கள் வானத்தில் அவன் புகழைச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அவன் நாட்டுக்குக் கடல் வரம்பானாலும் அவன் புகழுக்கு வானந்தான் வரம்பு.'

"ஆம், வானவரம்பன்தான் எங்கள் மன்னன்.”

"பஞ்சபாண்டவர்களோடு நூற்றுவராகிய துரியோதனாதியர் போட்ட சண்டையில் அந்த நூற்றுவரும் அழிந்தொழிந்தார்கள். அதர்மம் தோற்றது. அவர்கள் அழியும் வரைக்கும் இரு படைக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/30&oldid=1528972" இலிருந்து மீள்விக்கப்பட்டது