பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோறு அளித்த சேரன்

23



கணக்கே யில்லாமல் சோறு வழங்கினான் உங்கள் அரசன். அவன் நீடுழி வாழவேண்டும். பசுவின் பால், கறக்கும்போதே புளித்துப் போனாலும், சூரியனுக்குள் இருட்டுப் புகுந்தாலும், நான்கு வேதங்களின் நெறி பிறழ்ந்து போனாலும் தனக்கு உதவியாக நிற்கும் மாறா மனம் படைத்த மந்திரிகளோடே நடுக்கமில்லாமல் வாழ்வானாக! எங்கள் இமாசலம்போல் வாழ்வானாக!'

இந்த வாழ்த்துப் புலவர் காதிலே குளிர்ச்சியாக விழுந்தது.

"இமாசலம் போல நடுக்கமின்றி உங்கள் அரசன் வாழ்க!" என்று அந்தப் பெரியவர் சொன்னாரல்லவா? அதைக் கேட்டவுடன் புலவருக்கு இமாசல நினைவு வந்தது. அந்த மாபெரு மலைக்குச் செல்ல அவா எழுந்தது. புறப்பட்டார். போனார். கண்டார்.

இமயமலையின் உன்னதத்தைக் கண்ணால் அளக்க முடியுமா? பாரதநாட்டின் வடபேரெல்லையாக வானை நோக்கி நிமிர்ந்து நிற்கும் அந்த மலைச் சாரலிலே புகுந்து பார்த்தார். பல முனிவர்களின் ஆசிரமங்களை அடைந்து அவர்களைத் தரிசித்தார்.

ஆசிரமங்களில் இயற்கை எழில் தவழ்ந்தது. தவம் மலிந்திருந்தது. எல்லாம் அன்பு மயம். முனிவர் எரியோம்பும் வாழ்க்கையுடையவர். அந்த ஒமகுண்டத்தைச் சுற்றி இரவுக் காலத்தில் மடமான்கள் தங்கள் குட்டிகளோடு அச்சமின்றித் தூங்கின. அந்த முத்தீயாகிய விளக்குக்கு முன்னே, புலி முதலிய விலங்கினங்கள் வாரா என்ற தைரியத்தோடு தம்மை மறந்து அவை துயில் புரிந்தன. இந்தக் காட்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/31&oldid=1528980" இலிருந்து மீள்விக்கப்பட்டது