பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

எல்லாம் தமிழ்

முடி நாகராயருடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்டது.

காலையில் சூரியனது செங்கதிர் இமயத்தின் மேலே வீசியது. வானளாவிய அதன் சிகரம் பொன்னைப் போலப் பளபளத்தது. அதைப் பார்த்து வியந்து கொண்டே நின்றார் புலவர். பொற்குவையே சிகரமாக அங்கே பொருந்தி நிற்கிறதோ?' என்று ஐயுற்று நின்றார். ஒரு முனிவர், 'அதற்குக் காஞ்சன சிருங்கம் என்று பெயர்' என்றார். புலவர், "பொற் கோட்டு இமயம்" என்று அப் பெருமலையைப் போற்றினர்.

"ஆம், நம் மன்னன் இந்த இமாசலத்தைப் போன்ற உயர்வுடையவன்; பரந்த உள்ளமுடையவன்; குளிர்ந்த உள்ளமுடையவன்; இதைப்போல நடுக்கின்றி வாழ்வானாக!" என்று மனத்துள் வாழ்த்தினர்.

இமாசலத்தின் முன்னாலே அவருக்குத் தமிழ் நாட்டு நினைவு தோன்றியது. 'உருவத்தால் சிறியவராயினும் வன்மையில் பெரிய அகத்தியர், உருவத்தால் சிறியதாயினும் புகழினால் பெரிய பொதிகையில் இருக்கை கொண்டார். இமயமும் பொதியிலும் பெருமையால் ஒத்தனவே; பாரத நாட்டின் கலைத் திறத்தையும் தவச் சிறப்பையும் காக்கும் தம்பம்போல் இருக்கின்றன. இரண்டும் நடுக்கம் இல்லாதவை. சேரன் இமாசலத்தைப் போல வாழவேண்டும். பொதியிலைப் போலவும் தமிழைப் பாதுகாத்து நடுக்கின்றி வாழவேண்டும்.'

தமிழ்ப்புலவர் உள்ளம் இயமத்தையும் பொதியிலேயும் இணைத்துப் பார்த்து மகிழ்ந்தது. இரண்டும் ஒரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/32&oldid=1528979" இலிருந்து மீள்விக்கப்பட்டது