பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோறு அளித்த சேரன்

25

சால்புக்கு எல்லையாக நிற்பதை உணர்ந்தது. பாரத நாட்டின் சிறப்பையே அளந்து கண்டவர்போன்ற பெருமிதம் அவருக்கு உண்டாயிற்று.

முரஞ்சியூர் முடிநாகராயர் தமிழ்நாட்டுக்கு மீண்டு வந்தார். உதியஞ் சேரலாதனைப் பார்த்துவிட்டுத்தான் மறுகாரியம் செய்வதென்ற வேகம் இருந்தது அவருக்கு. மன்னனை அணுகினார்.

"புலவரே, வடநாட்டு யாத்திரை சுகமாக இருந் ததா? என்ன என்ன அதிசயம் கண்டீர்கள்?" என்று சேரன் கேட்டான்.

"எங்கும் சேரலாதன் பெருமையைத்தான் கேட்டேன். நீ வாழ்க!" என்று உணர்ச்சி மிகுதியால் பேசினார் புலவர். அவர் உள்ளக் கருத்து, பாட்டாக வெளியாயிற்று.

மண்திணிந்த நிலனும் நிலன் ஏந்திய விசும்பும்
விசும்புதைவரு வளியும் வளித்தலேஇய தீயும்
தீமுரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும்
வலியும் தெறலும் அளியும் உடையோய்,
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும்நின்
வெண்டலைப் புணரிக் குடகடற் குளிக்கும்
யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந,
வான வரம்பன நீயோ பெரும,
அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத்து ஒழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்,
பாஅல்புளிப்பினும் பகல்இருளினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/33&oldid=1529069" இலிருந்து மீள்விக்கப்பட்டது